சிம்பு நடிக்கும் ‘அரசன்’ பட புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் கடைசியாக ‘விடுதலை பாகம் 2’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். சிம்புவின் 49வது படமான இந்த படத்திற்கு அரசன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்கப்போவதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் சாய் பல்லவி அல்லது சமந்தா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும், உபேந்திரா அல்லது கிச்சா சுதீப் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தவிர இந்த படம் ‘வடசென்னை’ படத்தின் யுனிவர்ஸாக உருவாகும் என்றும், இரண்டு பாகங்களாக உருவாகும் என்றும் வெற்றிமாறன் அப்டேட் கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளார்.
மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. அடுத்தது இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி மாலை 6.02 மணி அளவில் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் எனவும், வருகின்ற 17ஆம் தேதி காலை 10.07 மணியளவில் சமூக வலைதளங்களில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து முடிப்பதற்குள் மற்றுமொரு புதிய அப்டேட் வெளிவந்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகர் சிம்பு இரண்டு விதமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. எனவே வெற்றிமாறன் வேற மாறி சம்பவம் செய்யப்போகிறார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அரசன் படத்தின் ப்ரோமோ 5 நிமிடங்கள் 33 வினாடிகள் நீளம் கொண்டவை என்றும் இந்த ப்ரோமோவிற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.