spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஆச கூட' பாடலின் போது என் நினைவுக்கு வந்தது அந்த நடிகை தான்.... சாய் அபியங்கர்!

‘ஆச கூட’ பாடலின் போது என் நினைவுக்கு வந்தது அந்த நடிகை தான்…. சாய் அபியங்கர்!

-

- Advertisement -

இசையமைப்பாளர் சாய் அபியங்கர் சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.'ஆச கூட' பாடலின் போது என் நினைவுக்கு வந்தது அந்த நடிகை தான்.... சாய் அபியங்கர்!

பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன்தான் சாய் அபியங்கர். இவர் ஆச கூட, கட்சி சேர ஆகிய சுயாதீன பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் பல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே சூர்யாவின் கருப்பு, கார்த்தியின் மார்ஷல், ராகவா லாரன்ஸின் பென்ஸ், அட்லீ – அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இன்னும் சில படங்களிலும் கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில் இவர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் டியூட் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 'ஆச கூட' பாடலின் போது என் நினைவுக்கு வந்தது அந்த நடிகை தான்.... சாய் அபியங்கர்!இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் படமானது வருகின்ற அக்டோபர் 17, தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் இசையமைப்பாளர் சாய் அபியங்கர், மமிதா பைஜு குறித்து பேசி இருக்கிறார். 'ஆச கூட' பாடலின் போது என் நினைவுக்கு வந்தது அந்த நடிகை தான்.... சாய் அபியங்கர்!அதன்படி அவர், “‘ஆச கூட’ பாடலை நான் இசை அமைத்த போது எனக்கு முதலில் மமிதா பைஜுதான் நினைவுக்கு வந்தார். நான் அவருடன் பணியாற்ற விரும்பினேன். அவருடைய எனர்ஜி, பாடலின் அதிர்வுக்கு சரியாக பொருந்தும் என்று நினைத்தேன். எனவே அவரை அணுகினேன். ஆனால் துரதிஷ்டவசமாக படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட மோதல் காரணமாக அது நடக்காமல் போனது. எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ