spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅந்த இடத்துல அவர் என்ன நினைக்கிறாரோ அதை தான் எழுதுவார்.... மாரி செல்வராஜ் குறித்து துருவ்...

அந்த இடத்துல அவர் என்ன நினைக்கிறாரோ அதை தான் எழுதுவார்…. மாரி செல்வராஜ் குறித்து துருவ் விக்ரம்!

-

- Advertisement -

நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் குறித்து பேசியுள்ளார்.அந்த இடத்துல அவர் என்ன நினைக்கிறாரோ அதை தான் எழுதுவார்.... மாரி செல்வராஜ் குறித்து துருவ் விக்ரம்!

இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் பைசன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க அனுபவமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அமீர், பசுபதி, லால், ரஜிஷா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும், அப்பிளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படம் மாரி செல்வராஜின் மற்ற படங்களை போல் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

எனவே வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. அடுத்தது இதன் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “நான் படப்பிடிப்பிற்கு முன்னர் தான் ஸ்கிரிப்டை படித்தேன். அந்த இடத்துல அவர் என்ன நினைக்கிறாரோ அதை தான் எழுதுவார்.... மாரி செல்வராஜ் குறித்து துருவ் விக்ரம்!எனக்கு கதை தெரியும். ஆனால் அது வித்தியாசமாக மாறியது. மாரி செல்வராஜ் சார் அந்த இடத்திலேயே அவர் என்ன நினைக்கிறாரோ அதை தான் வசனமாக எழுதுவார். எனவே அந்த வசனங்களை நாம் மனப்பாடம் செய்யாமல் அந்த இடத்திலேயே பேசும்போது உண்மையிலேயே உணர்ந்து பேசுவது போல் இருக்கும். அது நல்லா இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ