நடிகர் சூரியின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் பரோட்டா சூரி என்று பலராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் சூரி. அதைத் தொடர்ந்து இவர் சசிகுமார், விமல், சிவகார்த்திகேயன், சூர்யா, விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். அதேசமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சூரிக்கு கருடன், விடுதலை 2 போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இதற்கிடையில் மாமன், ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் சூரி. இதன் பின்னர் இவர், மதிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும் இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நாளை (ஏப்ரல் 18) காலை 11:30 மணியளவில் சூரி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் “காயத்தை ஏற்படுத்திய ஆயுதத்தால் மட்டுமே காயத்தை ஆற்ற முடியும்” என்ற வசனமும் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருக்கிறது. இதன்மூலம் இந்த படம் இந்த படம் ஆக்சன் படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.