spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் +12 தேர்வில் வெற்றி பெற்ற 70 வயதான மூதாட்டி!

எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் +12 தேர்வில் வெற்றி பெற்ற 70 வயதான மூதாட்டி!

-

- Advertisement -

கோவையில் 70 வயதான மூதாட்டி 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுள்ளாா்.எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் தானாகவே படித்து 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற 70 வயதான மூதாட்டி! தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியானது. இதில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனா். இந்த ஆண்டும் வழக்கம் போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனா்.  மொத்தமாக தோ்ச்சி பெற்றவா்களில் 4,05,472 மாணவிகள், 3,47,670 மாணவா்கள். 3.54% மாணவிகள் மாணவர்களை விட கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனா்.எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் தானாகவே படித்து 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற 70 வயதான மூதாட்டி! கோவையில் T.ராணி என்ற 70 வயதான மூதாட்டி கணவன் இறந்த பிறகு வீட்டில் தனியாக இருப்பதால், தனிமையை போக்க படிக்க ஆரம்பித்துள்ளாா். இவா் கல்லூரியில் சோ்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக 12-ம் வகுப்பு தோ்வு எழுத திட்டமிட்டுள்ளாா்.எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் தானாகவே படித்து 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற 70 வயதான மூதாட்டி! இதனால் எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் தானாகவே படித்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகியுள்ளாா். இதில் முதல் முறையாக தேர்வு எழுதிய பொழுதே 600 க்கு 346 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில் அதிகபட்சமாக 89 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் பள்ளிகளை விட மாநகராட்சி பள்ளிகளில் கற்பித்தல் முறை சிறப்பாக உள்ளது – மாணவிகள் நெகிழ்ச்சி

we-r-hiring

 

MUST READ