Homeசெய்திகள்சினிமாசெம ரைட்டிங்.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

செம ரைட்டிங்…. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.செம ரைட்டிங்.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்ட படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இலங்கையில் இருந்து பொருளாதார கஷ்டம் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களை தாண்டி புதிய வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதை நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் கொடுத்திருந்தார் அபிஷன். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, ரமேஷ் திலக், கமலேஷ், மிதுன் மற்றும் பலர் நடித்திருந்தனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளைக்கு நாள் வசூலையும் வாரி குவித்து வருகிறது.

we-r-hiring

அந்த வகையில் இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் இரண்டாவது வாரமாக பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன், “செம ரைட்டிங்.. நல்ல மேக்கிங்… எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சி இருந்தது” என்று கூறி படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ