spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'STR 51' குறித்து தரமான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

‘STR 51’ குறித்து தரமான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

-

- Advertisement -

STR 51 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.'STR 51' குறித்து தரமான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் சிம்பு, பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49 வது படத்திலும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். அதேசமயம் ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் சிம்பு. அதன்படி இந்த படத்திற்கு தற்காலிகமாக STR 51 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சிம்பு, காதலின் கடவுளாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

we-r-hiring

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “STR 51 படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். சிம்பு ரசிகர்களுக்கு பயங்கர திருப்தியான படமாக இருக்கும். கதாநாயகியை தேர்வு செய்துவிட்டோம். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அப்டேட்டுகள் வரும். செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ