நடிகர் சல்மான் கான் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டையைக் கழற்றி உடற்கட்டை காண்பித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சல்மான் கான் நடிப்பில் ‘வீரம்‘ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் வெங்கடேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பர்ஹாத் ஷாம்ஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.


ஜெகபதி பாபு, பூமிகா, மாளவிகா சர்மா, அபிமன்யூ சிங், சித்தார்த் நிகம் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ராம் சரண் சிறப்பு தோற்றத்தில் வந்து நடனமாடியுள்ளார். படத்திற்கு ‘கிஷி கா பாய் கிஷி கா ஜான்‘(Kisi Ka Bhai Kisi Ki Jaan) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
Saw his abs live 🔥🔥🔥🔥🔥 #SalmanKhan @BeingSalmanKhan pic.twitter.com/CB4ph02xZH
— SALMAN KI SENA™ (@Salman_ki_sena) April 10, 2023
சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சல்மான் கான், பூமிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சல்மான் கான் தன் படங்களில் VFX மூலம் தான் சிக்ஸ் பேக் வைத்து ரசிகர்களை கவர்வதாக ஒரு செய்தி எப்போதும் நிலவி வரும். இந்நிலையில் மேடையில் பேசிக்கொண்டே சட்டையைக் கழற்றிய சல்மான் பாய், சிக்ஸ் பேக் எல்லாம் ஒரிஜினல் தான் என்பது போல காண்பிக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


