spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிமுகவில் அன்வர் ராஜா! எடப்பாடி மகனுக்காக நடந்த டீல்! ஸ்டாலினுக்கு வரலாற்று ஜாக்பாட்!

திமுகவில் அன்வர் ராஜா! எடப்பாடி மகனுக்காக நடந்த டீல்! ஸ்டாலினுக்கு வரலாற்று ஜாக்பாட்!

-

- Advertisement -

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டபோதும் வேறு கட்சியில் இணையாமல் காத்திருந்து மீண்டும் கட்சியில் இணைந்தவர் அன்வர் ராஜா. அவர் திமுகவுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு கட்சி தலையால் தள்ளப்பட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அதிமுக முன்னாள் நிர்வாகி திமுகவில் இணைந்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுக மூத்த தலைவர் அன்வர்ராஜா அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து கடந்த 2021ல் அன்வர் ராஜா நீக்கப்படுகிறார். அதற்கு பிறகு 2023ல் அவர் மீண்டும் அதிமுகவில் சேர்வதற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். இனி பாஜக உடன் கூட்டணியே கிடையாது என்று எடப்பாடி சொன்ன பிறகுதான் அவர் மீண்டும் கட்சியில் இணைந்தார். அதற்கு பிறகு கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. 2024 தேர்தலின் போது சிறுபான்மையினர் வாக்குகள் வேண்டும் என்பதற்காக அன்வர் ராஜாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகியுள்ளது, அந்த கட்சிக்கு மிகப் பெரிய இழப்பு ஆகும்.

ஏனென்றால் அவர் அதிமுகவில் உள்ள சிறுபான்மையினர் சமுதாயத்தின் முக்கிய முகமாக விளங்கினார். அன்வர்ராஜா ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பஞ்சாயத்தில் 1986 முதல் 2001 வரை சேர்மேனாக இருந்துள்ளார். தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் அவர் சேர்மேனாக இருந்துள்ளதற்கு, மக்கள் செல்வாக்குதான் காரணம். மேலும் அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை போன்று அன்வர்ராஜா மீது எந்தவித புகார்களும் கிடையாது. எடப்பாடி பழனிசாமியிடம், அன்வர்ராஜாவுக்கு செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதிமுகவில் அவருக்கு செல்வாக்கு உள்ளது.

பாஜகாவுடன் கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி…

அன்வர் ராஜாவின் இழப்பு என்பது அதிமுகவுக்கு தென் தமிழகத்தில் பெரிய இழப்பு ஆகும். எடப்பாடி பழனிசாமி தனது மகனுக்காக பாஜக உடன் கூட்டணி அமைத்தார். அப்படி பாஜக உடன் கூட்டணி செல்கிறபோது, அதிமுகவில் இருக்கும் சிறுபான்மையினரிடம் அதிருப்தி ஏற்படும் என அறிந்து, அவர்களை எடப்பாடி அழைத்து விளக்கம் அளித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் அன்வர் ராஜா வெளியேறி இருக்க மாட்டார். தங்களின் சமுதாயத்திற்குள் பாஜக உடன் கூட்டணி வைத்தது எப்படி? என்று அழுத்தம் ஏற்படுகிறபோது, அதற்கு விளக்கமாக கூட எடப்பாடி பழனிசாமி எதையும் சொல்லவில்லை என்பதுதான் அவர்களின் வேதனைக்கு காரணம்.

குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா, பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரியும் வரை காத்திருந்து, மீண்டும் கட்சியில் இணைந்தார். அப்படிபட்ட நபரை கட்டாயப்படுத்தி திமுகவில் இணைய வைத்துள்ளனர். ஏற்கனவே டிடிவி தினகரன் விலகியதால், தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமாக உள்ளது. தற்போது அன்வர் ராஜா விலகியுள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. அப்போது எடப்பாடி பழனிசாமி எப்படியாவது தேர்தலில் தோற்க வேண்டும். மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி சொல்கிற பேச்சை கேட்டு அனுசரித்து செல்லக் கூடிய இடத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக 2024 மக்களவை தேர்தலில் திமுக தோற்று இருக்கும். அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தது முதல் ஜுலை முடிவதற்குள் வரும் முரண்பாடுகளை பாருங்கள். கூட்டணி ஆட்சி என்கிற கருத்து தமிழ்நாட்டில் இதுவரை இருந்ததில்லை. தற்போதுதான் அறிமுகம் செய்கிறார்கள். விஜய் கூட்டணி ஆட்சி என்று சொல்வதன் நோக்கம் என்பது தமிழ்நாட்டில் நான் இருக்கிறேன் என்பதுதான். தேர்தலில் 15 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை எடுத்தால் அதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. அடுத்த தேர்தலில் நீங்கள்தான் எதிர்க்கட்சியாக வருவீர்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பது 5 சதவீதம் தான். அதில் 3 – 4 சதவீத வாக்குகளும், சீமானிடம் இருந்து 3-2 சதவீதம் வாக்குகளும் வந்தால் கிட்டத்தட்ட 6 சதவீதம் வந்துவிடும். என்னை பொருத்தவரை விஜய்க்கு என்று 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் உள்ளன. அப்போது 15 சதவீதம் வாக்குகள் வந்துவிடும். அப்போது கூட்டணி ஆட்சி என்று யார் சொல்கிறார்கள்? பாமக, பாஜக தரப்பிலும் கூட்டணி ஆட்சி என்று நூல் பிடித்தாற்போல் சொல்கிறார்கள். என்னை பொருத்தவரை மு.க.ஸ்டாலின் அடுத்த முறை முதலமைச்சராக வந்தாக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக தான் தோன்றுகிறது.

துப்பாக்கியை தொடர்ந்து விஜயின் 50வது பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸாகும் போக்கிரி!

எதிர்க்கட்சிகள் வலுவிழந்து நிற்கக்கூடிய இடத்தில் திமுக மெத்தனப் போக்கு உடன் நடந்துகொள்கிறது. மக்கள் பிரதிநிதிகளால்,மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனை முதலமைச்சர் கட்டுப்படுத்தாவிட்டால் அவர் எத்தனை சாரி கேட்டாலும், அவர் இறங்கி சென்று பேசினாலும் பலன் இருக்காது. தமிழ்நாட்டில் இன்று பெரிய தலைவர் என்கிற இமேஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் தான் உள்ளது. 4 ஆண்டுகள் ஆட்சி முடிந்த பிறகும் செல்வாக்குடன் இருக்கும் தலைவரும் அவர்தான்.

திமுகவுக்கு நெகட்டிவ் ஓட்டுகள் தான் வந்து கொண்டிருக்கிறது. எம்ஜிஆருக்கு பிறகு 1987ல் நெகட்டிவ் ஓட்டுகள். ஏனென்றால் 3 சின்னங்களில் போட்டியிட்டனர். 1996 தேர்தலில் ஜெயலலிதா செய்த அடாவடித் தனத்திற்கு நெகட்டிவ் ஓட்டுகள் வந்தன. 2006ல் டெஸ்மா, எஸ்மா போன்ற சட்டங்களை பயன்படுத்தியதால் மறுபடியும் நெகட்டிவ் வாக்குகள்.  மறுபடியும் 2011-16 வரை ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை. பெரிய நெகட்டிவிட்டி இல்லாததால் அவர் 2016 தேர்தலில் வெற்றி பெற்றார்.

என்னை பொருத்தவரை 5 வருட காலம் இருக்கும் ஒரு கட்சிக்கு, அந்த அளவுக்கு ஆன்டி இன்கம்பன்சி இருக்கும். அந்த ஆன்டி இன்கம்பன்சியில் தாராளமாக மற்றொரு கட்சி வந்து உட்காரும். முழுக்க முழுக்க நெகட்டிவ் வாக்குகள் மூலமாக தான் திமுக இதுவரை ஜெயித்து வருகிறது. அதிமுக -பாஜகவின் நெகட்டிவிட்டியால் திமுக ஆட்சிக்கு வருகிறது. இந்த சூழ்நிலை மாற வேண்டும். திமுக என்பது ஒரு பாசிட்டிவ் ஆன கட்சி என்று மாற வேண்டும். அதற்கான அனைத்து விஷயங்களையும் முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். கீழே இருப்பவர்கள் அவர் செய்கிற எல்லாவற்றையும் கவிழ்த்துக் கொண்டிருக்கின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ