spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபுதிதாக வெளியான கருத்துக்கணிப்பு! உச்சக்கட்ட பயத்தில் எடப்பாடி பழனிசாமி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

புதிதாக வெளியான கருத்துக்கணிப்பு! உச்சக்கட்ட பயத்தில் எடப்பாடி பழனிசாமி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

-

- Advertisement -

ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் விஜயுடன் கூட்டணிக்கு செல்வதாக கூறுவது உண்மையில்லை. இருவரும் அதிமுகவில் சேர எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

2024 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்தால் தேர்தல் முடிவுகள் எப்படி வந்திருக்கும் என்று நியூஸ் 18 தொலைக்காட்சி நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- நியூஸ் 18 தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது கருத்துக்கணிப்பு கிடையாது. அட்டவணை. அதிமுக, பாஜக ஆகியோர் வாங்கிய வாக்கு விவரங்களை தனித்தனியே பட்டிலிட்டு இருக்கிறார்கள். பின்னர் அதிமுக – பாஜக கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் வடக்கு மேல் பகுதியில் 38.1%. திமுக 51%/. மத்திய வடக்கு பகுதிகளில் 46.3%. திமுக 44.3%. காவிரி டெல்டாவில் 37.5%. திமுக 48.5%. மேற்கு மண்டலத்தில் அதிமுக – பாஜக கூட்டணி குறைவு என்றும், தெற்கில் இருதரப்பும் சமமாக உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

ஒட்டு மொத்தத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருந்தால் மத்திய மேற்கு மாவட்டங்களில், திமுக கூட்டணியைவிட அதிக வாக்குகள் பெற்றிருக்கலாம் என்பதுதான் இந்த கருத்துக்கணிப்பின் முடிவாகும். தென் மாவட்டங்களில் பாஜக, ஓபிஎஸ், தினகரன், சசிகலா, ஜான்பாண்டியன் போன்றவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதனால் தான் அண்ணாமலை 18.5 சதவீதம் வாக்குகள் கிடைத்ததாக சொல்கிறார். அண்ணாமலை, டெல்லியில் உள்ள கட்சி தலைமையிடம் பாஜக 10 தொகுதிகளில் வெற்றி பெறும். கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று சொன்னார். ஆனால், சி.பி.ராதாகிருஷ்ணன் இது தவறானது என்று சொல்லி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி வைத்தார். அதன் மூலம் ஆந்திராவில் 22 இடங்கள் கிடைத்தன.

அண்ணாமலை, நயினார் நாகேந்திரனை எப்படியாவது தூக்கி உள்ளே வைத்துவிட வேண்டும் என்று பார்த்தார். நயினார், சி.பி. ராதாகிருஷ்ணனின் சிஷ்யன் ஆவார். நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை திட்டம் தோல்வி அடைந்த உடன், சிபிஆரிடம் கேட்டார்கள். அவர் தனது சிஷ்யனான நயினாருக்கு மாநில தலைவர் பதவியை வழங்கினார். அண்ணாமலையால் தான் கூட்டணி போனது. தற்போது அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். ஆனால் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் போன்றவர்கள் இல்லாததால், அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்கு வங்கி இல்லாமல் போய்விட்டது. அதிமுக 19 சதவீதம் வாக்குகள் வாங்குகிறது. இது முழுக்க முழுக்க பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கியாகும்.

நியூஸ் 18 கருத்துக்கணிப்பில் அதிமுக – பாஜக சேர்ந்து ஒட்டுமொத்தமாக 38 சதவீத வாக்குகள் உள்ளதாக சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த வாக்குகள் என்பது, பாஜகவுக்கு எதிரான வாக்குளாகும். அதேபோல், தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் முக்குலத்தோரில் ஒரு பகுதி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எதிர்க்கிறது. ஓபிஎஸ், தினகரன் போன்ற தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு எதிராக வாக்குகளை திரட்டுவதுடன், மாநிலம் முழுவதும் கட்சியில் பிளவை ஏற்படுத்துகின்றனர்.

OPS

பாஜகவை தவிர்த்துவிட்டு ஒன்றிணைந்த அதிமுக உருவாகினால், மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வருமா? என்று கேள்வி எழலாம். ஆனால் பாஜக அதற்கு அனுமதிக்காது. அதிமுகவை துண்டு துண்டாக உடைத்துவிடும். எஸ்.பி.வேலுமணி அதற்கு தயாராக உள்ளார். அதிமுக, பாஜக தலா 2.5 ஆண்டுகள் ஆட்சி செய்யலாம். தன்னை முதலமைச்சராக வேட்பாளராக அறிவியுங்கள் என்று எஸ்.பி.வேலுமணி சொன்னார். அதிமுகவில் தற்போதுள்ள எம்.எல்.ஏக்களில் 25 பேர் வேலுமணியுடன் வந்து விடுவார்கள். அவர் ஜக்கி வாசுதேவ் மூலம் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

மேலும் ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன் போன்றவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். மேலும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுத்துச் செல்வதும் அவர்தான். அதன் காரணமாக தான் எடப்பாடி பழனிசாமி இன்றுவரை அதை எதிர்த்துக் கொண்டிருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் விஜய், சீமான் போன்றவர்கள் கூட்டணிக்கு வரக்கூடிய விதமான அதிமுகவை இனிமேல் உருவாக்க முடியாது.

sp velumani

ஓபிஎஸ் அணியினரை அதிமுகவில் இணைப்பது தொடர்பான கேள்விக்கு காலம் கடந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் விஜய் கட்சியுடன் செல்வார்கள் என்று தகவல்களை பரப்புகின்றனர். அப்படி தினகரன், விஜயுடன் கூட்டணிக்கு செல்லும்பட்சத்தில் அவர் திகார் ஜெயிலுக்கு செல்ல நேரிடும். ஏனென்றால் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு அவர் மீது ஆதாரங்களுடன் இருக்கிறது. அன்புமணி, பாஜகவை விட்டுசென்றால் அவரும் சிறையில்தான் இருப்பார். சரத்குமார் மகளின் மீது ஆயுதக்கடத்தல் வழக்கு என்.ஐ.ஏவில் உள்ளது.

இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் விஜய் பக்கம் போக வாய்ப்பு கிடையாது. அதை மறுத்துவிட்டு இருவரும் எடப்பாடி கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தினகரன் கூட்டணியாகவும், ஓபிஎஸ் நேடியாகவும் அதிமுகவில் இணைவார்கள். தனிக்கட்சி தொடங்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருக்கும் நிலையில், அதனை கைவிட்டுவிட்டு அதிமுகவில் இணைவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் பயணம் என்பது தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக நிலைநிறுத்திக் கொள்வதற்காக தான். அதில் அவர் பெரிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்.

விஜய் என்றைக்கும் அதிமுக ஆதரவாளர் தான். அவருடைய எதிரி என்பது திமுக. அதிலும் குறிப்பாக உதயநிதி ஸ்டாலின்தான். அவருடைய அஜெண்டாக்கள் மிகவும் பர்சனலானது. அதிமுக உடன் விஜய் கூட்டணி அமைத்தார் என்றால், அவர் தனக்கு இருக்கும் விஷயங்களை இழந்துவிடுவார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சீமான் சந்தித்த பின்னர், அவரது திமுக எதிர்ப்பு என்பது கீழே வந்துவிட்டது. அதேபோல, விஜய் ஒரு கூட்டணிக்கு செல்கிறார் என்றால்? திமுக – அதிமுகவுக்கு மாற்று சக்தி என்கிற விஜயனுடைய பிம்பம் உடைந்துவிடும். தற்போது விஜய்க்கு 15 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். இந்த வாக்குகள் திமுக, அதிமுக இல்லாத வாக்குகளாகும். அதில்தான் 8.5 சதவீதம் சீமான் வாங்கியுள்ளார். அவரிடம் அதிகளவு வாக்குகளை விஜய் வாங்குவார். அதுமட்டுமின்றி  அதிமுகவுக்கு செல்ல வேண்டிய திமுக எதிர்ப்பு வாக்குகளையும் வாங்குவார். இவை தவிர்த்து இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்குவார். பெரும்பான்மை இளைஞர்களின் வாக்குகளை பெறுவார்.

இதில் பிரச்சினை என்ன என்றால் வாக்குகளை அறுவடை செய்வதற்கான ஸ்தாபனமே கிடையாது. தவெக-வில் மாவட்ட செயலாளரை மட்டும் தான் நியமித்துள்ளனர். அதற்கு கீழே நிர்வாகிகள் வேண்டும். அதற்கான அமைப்புகள் வேண்டும். அந்த அமைப்புகள் தவெகவிடம் கிடையாது. மதுரை மாநாடு மூலம் தான் தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தப்போகிறார். விஜயின் அரசியல் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஜனநாயகன், விஜய்க்கு கடைசி படம் கிடையாது. அவர் அடுத்த படத்திற்கு கதை கேட்டுக்கொண்டிருக்கிறார். விஜய்க்கு, தன் மீதே அவருக்கு நம்பிக்கை கிடையாது. எனவே அவர் ரஜினியுடைய வாக்கு வங்கியை வைத்திருக்கும், அடுத்த கமல்ஹாசன் ஆவார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ