spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்தாய்லாந்து – கம்போடியா இடையே போா் நிறுத்தம்!

தாய்லாந்து – கம்போடியா இடையே போா் நிறுத்தம்!

-

- Advertisement -

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனையால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், போரை நிறுத்த இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.தாய்லாந்து – கம்போடியா இடையே போா் நிறுத்தம்தாய்லாந்து மற்றும் கம்போடியா இருநாடுகளும் எல்லை பகுதியில் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை  நடத்தி வந்தனா். இதற்கிடையில் இந்திய பயணிகளுக்கு தூதரகம் அறிவுறுத்தல் வழங்கி இருந்தது. மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் இரண்டு நாடுகளும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியர்கள்  அங்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தாய்லாந்து – கம்போடியா நாடுகள் போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாக அறிவிப்பு  வெளியாகியுள்ளது. தாய்லாந்து – கம்போடியா இடையே போரை நிறுத்த மலேசியா பிரதமா் மத்தியஸ்தம் செய்து வந்தாா். எல்லையோரத்தில் உள்ள  கோயிலை சொந்தம் கொண்டாடும் விவகாரத்தில் தாய்லாந்து – கம்போடியா நாடுகளுக்கு இடையே போா் ஏற்பட்டுள்ளது. ஜூலை 24 முதல் இருநாடுகளும் எல்லைகளில் தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில்  மலேசியா பிரதமா் அன்வா் இப்ராஹிம் மத்தியத்தியஸ்தால் இருநாடுகளும் போரை நிறுத்த ஒப்புக் கொண்டது.

மகளிர் செஸ் – வரலாறு படைத்த இந்தியா

we-r-hiring

MUST READ