கார்த்தியின் ‘மார்ஷல்’ பட வில்லன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கார்த்தி கடைசியாக ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கார்த்தி, ‘சர்தார் 2’, ‘வா வாத்தியார்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் ‘டாணாக்காரன்’ படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தனது 29 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். கடல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மார்ஷல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் வடிவேலு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே பூஜையுடன் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தான் இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் பிரபல நடிகர் ஜீவா தான் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.