spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'அமரன்' படத்தினால் எனக்கு தான் அதிர்ஷ்டம்.... ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி!

‘அமரன்’ படத்தினால் எனக்கு தான் அதிர்ஷ்டம்…. ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி!

-

- Advertisement -

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அமரன் படத்தினால், தனக்கு தான் அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.'அமரன்' படத்தினால் எனக்கு தான் அதிர்ஷ்டம்.... ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு ‘மதராஸி’ படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

we-r-hiring

அதன்படி அவர், “நான் ‘மதராஸி’ படத்தின் கதையை சிவகார்த்திகேயனிடம் சொல்லும் போது அவர் ‘மாவீரன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு ‘அமரன்’ திரைப்படம் எனக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. ராஜ்குமார் என்னிடம் தான் பணிபுரிந்தார். அப்போது அவரிடம் ‘அமரன்’ திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்ததா அல்லது கமல்ஹாசன் சாருக்கு உதவி செய்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஆனா எனக்கு அது நிறைய உதவி இருக்கிறது என்று சொன்னேன். ஏனென்றால் ‘மதராஸி’ படம் பெரிய பிரம்மாண்டமான படம். எனவே இந்த படத்திற்காக கணக்கு பார்க்காமல் செலவு செய்யலாம் என்ற நம்பிக்கையை ‘அமரன்’ திரைப்படம் எனக்கு ஏற்படுத்தி தந்தது” என்ற தெரிவித்துள்ளார்.

MUST READ