சூர்யாவின் 45வது படமாக உருவாகும் திரைப்படம் தான் கருப்பு. இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்க அவருடன் இணைந்து திரிஷா, சுவாசிகா, யோகி பாபு, நட்டி நடராஜ், ஷிவதா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஏனென்றால் சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘கங்குவா’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் அடுத்ததாக கருப்பு படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டீசரை பார்க்கும்போது இந்த படம் மாஸ் என்டர்டெய்னர் படமாக இருக்கும் போல் தெரிகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படம் 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக இப்படம் 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகி வருகின்றன. ஏனென்றால் தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றாக தங்களின் ரிலீஸ் குறித்து அறிவித்து வருகின்றனர். ஆனால் ‘கருப்பு’ படக்குழு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
எனவே 2026 பொங்கல் தான் இப்படக்குழுவினரின் டார்கெட்டாக இருக்கும் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தாலும் 2026 பொங்கல் விஜயின் ‘ஜனநாயகன்’ களமிறங்க போகிறது. எனவே 2026 பொங்கலுக்கும் ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகுமா? என்பது சந்தேகம்தான். இந்த தகவல் சூர்யா ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.
- Advertisement -