Homeசெய்திகள்சினிமாசசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்' பட புகைப்படங்கள் வைரல்!

சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ பட புகைப்படங்கள் வைரல்!

-

- Advertisement -

சசிகுமார் நடிக்கும் மை லார்ட் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்' பட புகைப்படங்கள் வைரல்!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ‘எவிடென்ஸ்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர ‘வதந்தி 2’ என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், மை லார்ட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜோக்கர், குக்கூ, ஜப்பான் ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கியிருக்கிறார். சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்' பட புகைப்படங்கள் வைரல்!இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சைத்ரா ஆச்சர், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் நீரவ் ஷா இந்த படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்' பட புகைப்படங்கள் வைரல்!வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்' பட புகைப்படங்கள் வைரல்!

நடிகர் சசிகுமார் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வருவார். அதன்படி இந்த படத்திலும் சசிகுமாரின் கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ