Homeசெய்திகள்சினிமாசூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்.... நடிகை மமிதா பைஜு!

சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்…. நடிகை மமிதா பைஜு!

-

- Advertisement -

நடிகை மமிதா பைஜு, சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதாக கூறியுள்ளார்.சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்.... நடிகை மமிதா பைஜு!

மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்திழுத்தவர் மமிதா பைஜு. அதாவது பிரேமலு படத்திற்கு பிறகு ட்ரெண்டிங் நடிகையாக மாறிய இவர் தற்போது ‘பிரேமலு 2’ படத்தில் நடிக்கிறார். இது தவிர தமிழிலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் விஜயின் ‘ஜனநாயகன்’, விஷ்ணு விஷாலின் ‘இரண்டு வானம்’, பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் இவர், தனுஷுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர், சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். ‘சூர்யா 46’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்.... நடிகை மமிதா பைஜு!இந்நிலையில் நடிகை மமிதா பைஜு சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதாக கூறியுள்ளார். அதன்படி அவர், “சூர்யா 46 படத்திற்கு முன்பாக சூர்யா சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை நான் இழந்துவிட்டேன். இப்பொழுது மீண்டும் அவருடன் நடிப்பதற்கான இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ