spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமீண்டும் திமுக ஆட்சி! அதிமுகவுக்கு 3 இடங்கள்! சீ ஓட்டர் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

மீண்டும் திமுக ஆட்சி! அதிமுகவுக்கு 3 இடங்கள்! சீ ஓட்டர் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

-

- Advertisement -

இந்தியா டுடே – சீ ஓட்டர் நிறுவனம் வெளியிட்டிருக்கும் கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 3 மக்களவை தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதாகவும், இது திமுகவினருக்கு விடுக்கப்பட்டிருக்கு எச்சரிக்கை ஒலி என்றும் ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இந்தியா டுடே – சி ஓட்டர் நிறுவனம் வெளியிட்டிருக்கும் கருத்துக்கணிப்பு  முடிவுகள் தொடர்பாக ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:- இந்தியா டுடே – சி ஓட்டர் நிறுவனம் நாட்டு மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழ்நாட்டில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்றால் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று சொல்கிறது. அதிமுக – பாஜக கூட்டணிக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற்றால் மொத்தமுள்ள 39 இடங்களில் 3ல் அதிமுக – பாஜக கூட்டணியும், 36ல் திமுக கூடடணியும் வெல்லும் என்று இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது 3 இடங்களை திமுக கூட்டணி இழப்பதால், இது ஒரு பின்னடைவா? என்று கேள்வி எழும். ஆனால் என்னை பொருத்த வரை இது திமுக இன்னும் சிறப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை ஒலியாக பார்க்கிறேன். இந்த ஓராண்டு காலத்தில் திமுகவினர் இன்னும் உழைக்க வேண்டும்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒருவேளை இதில் சிறு தவறு நடைபெற்று அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது ஆர்எஸ்எஸ்-ன் நேரடியான ஆட்சியாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் சொல்லிவிட்டார். அதிமுக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதலின் படி செயல்படுவதில் என்ன தவறு என்று எல்.முருகன் கேட்கிறார். அப்போது அதிமுக வேறு, ஆர்எஸ்எஸ் வேறு இல்லை என்று முருகன் சொல்லி இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அதிமுகவினரும் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் சொல்வதை நாங்கள் ஏன் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கொந்தளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

அப்படி உள்ளபோது வாக்குப்பதிவில் மோசடி செய்தோ, முறைகேட்டில் ஈடுபட்டோ அதிமுக – பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் அது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆட்சியாக இருக்கும் என்பதால் நான் கவலைப்படுகிறேன். திமுக ஆட்சியில் குறைகள் இருக்கின்றன. ஆனால் நிச்சயமாக இது மக்கள் விரோத அரசு அல்ல.  ஒப்பீட்டளவில் நாட்டில் உள்ள மற்ற ஆட்சிகளை விடவும், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியை விடவும் மிகச் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதால் பேசுகிறேன்.

கடந்த பிப்ரவரி மாதம் திமுக கூட்டணியின் வாக்கு வங்கி 52 சதவீதமாக இருந்தது. ஆனால் இம்முறை 47 சதவீதமாக சரிந்துள்ளது. அதேபோல் பாஜக – அதிமுக கூட்டணி 3 தொகுதிகளில் வரும் என்று சொல்கிறார்கள். அந்த தொகுதிகள் எவை என்று அடையாளம் கண்டு, அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. 2024 மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக தனித்தனியாக களம் கண்டு 41 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில், பிப்ரவரியில் 21 சதவீதமாக குறைந்தது. அது தற்போது 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் விஜய் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார். ஆனால் விஜய் பிரிக்கக்கூடிய வாக்குகள், திமுகவுக்கு கூடுதல் வெற்றியை தரக்கூடியதாக அமைந்திருப்பதாக இந்தியா டுடே – சி ஓட்டர் கருத்துக்கணிப்பு சொல்கிறது.

இதை நான் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகிறேன். காரணம் விஜய் பிரிக்கக்கூடிய வாக்குகள் யாருடையது என்பது யாருக்கும் தெரியாது. அவர் அதிமுக வாக்குகளை அதிகமாக பிரித்தார் என்றால்? அரக்கு எதிரான வாக்குகளை விஜய் கூடுதலாக பிரிப்பார் என்றால்? அதனால் திமுக கூட்டணி பெறப்போகும் வாக்கு சதவீதம் குறையலாம். ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயரும். திமுக 170 -180 இடங்களை தாண்டி வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதைதான் கருத்துக்கணிப்பு முடிவுகளும் சொல்கின்றன, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ