அட்டகத்தி தினேஷ் – கலையரசன் நடிக்கும் தண்டகாரண்யம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
அட்டகத்தி தினேஷ் கடந்த 2012 ஆம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அடுத்தது கடந்த ஆண்டு வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இதன் பின்னர், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர், தண்டகாரண்யம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கலையரசன், அட்டகத்தி தினேஷ் உடன் இணைந்து நடித்திருக்கிறார். இப்படத்தை பா. ரஞ்சித் தயாரிக்க, அதியன் ஆதிரை இதனை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும், பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. மேலும் இப்படத்தின் டீசரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. அதாவது அட்டகத்தி தினேஷ், சடையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக, கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.