spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வலியுறுத்தல்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வலியுறுத்தல்

-

- Advertisement -

ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் நம் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றி, அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என த வெ க கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளாா்.ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் – விஜய் வலியுறுத்தல்மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள வலைத்தளப்பக்கத்தில், ”அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள்;

அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்;

we-r-hiring

அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள்;

இவர்கள்தாம் கல்விக் கண் திறந்த எம் கொள்கைத் தலைவர் காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள்; ஆம், இவர்கள்தாம் நம் ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் நம் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றி, அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்“ என த வெ க கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளாா்.

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற நோக்கத்துடன் செயல்படுவர்கள் ஆசிரியர்கள் – ஓ. பன்னீர்செல்வம் புகழாரம்

MUST READ