spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநெருப்பு இல்லாமல் புகையுமா?.... எதுக்காக இப்படி பண்றீங்க?.... புகாரளித்த திருநங்கையிடம் நாஞ்சில் விஜயன் கேள்வி!

நெருப்பு இல்லாமல் புகையுமா?…. எதுக்காக இப்படி பண்றீங்க?…. புகாரளித்த திருநங்கையிடம் நாஞ்சில் விஜயன் கேள்வி!

-

- Advertisement -

நாஞ்சில் விஜயன் தன்மீது புகாரளித்த திருநங்கை மீது குற்றம் சாட்டியுள்ளார்.நெருப்பு இல்லாமல் புகையுமா?.... எதுக்காக இப்படி பண்றீங்க?.... புகாரளித்த திருநங்கையிடம் நாஞ்சில் விஜயன் கேள்வி!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் சில திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். மேலும் நாஞ்சில் விஜயனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இது தவிர இவர், அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. அந்த வகையில் நாஞ்சில் விஜயன், திருநங்கை ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்துள்ளது. சமீப காலமாக இந்த செய்தி பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.நெருப்பு இல்லாமல் புகையுமா?.... எதுக்காக இப்படி பண்றீங்க?.... புகாரளித்த திருநங்கையிடம் நாஞ்சில் விஜயன் கேள்வி! ஒரு பக்கம் அந்த திருநங்கை, நாஞ்சில் விஜயன் தன்னுடன் பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்தார் என்றும், நாஞ்சில் விஜயன் தன்னுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசினார் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் இந்த விஷயத்தில் மௌனம் காத்த நாஞ்சில் விஜயன் தற்போது தனது மனைவியுடன் இணைந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இது போன்ற சில பிரச்சனைகள் வரும்போது அதை கடந்து போய்விடலாம் என்ற முடிவில் தான் இருந்தேன். ஆனால் அதை தாண்டி நிறைய விமர்சனங்கள் வருகிறது. உன்னை பற்றி ஒரு திருநங்கை இவ்வளவு புகார் கொடுக்கிறார். நீ ஏன் அமைதியாக இருக்கிறாய்? நெருப்பு இல்லாமல் புகையுமா? என்பது போன்ற கேள்விகளை முன்வைக்கின்றனர். நான் என் மீது புகார் அளித்த திருநங்கையை ஒரு சகோதரியாக நினைத்துதான் பழகினேன். காதலிக்கவில்லை. நெருப்பு இல்லாமல் புகையுமா?.... எதுக்காக இப்படி பண்றீங்க?.... புகாரளித்த திருநங்கையிடம் நாஞ்சில் விஜயன் கேள்வி!அவர் சொல்வதெல்லாம் உண்மை இல்லை. அவர்தான் இரவில் கால் செய்து, மெசேஜ் அனுப்பி என்னை டார்ச்சர் செய்வார். நான் அவரை காதலித்தேன் என்பதற்கான ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா? நானே இப்போதுதான் என் மனைவி, குழந்தை என்று வாழ்ந்து வருகிறேன். இந்த நேரத்தில் எதுக்காக இப்படி பண்றீங்க?” என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் நாஞ்சில் விஜயனின் மனைவி, “அக்கா – தங்கச்சி என்று என்னை சொல்லிவிட்டு ஒரு தங்கச்சி வாழ்க்கையை இப்படி கெடுக்கிறீர்களே உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ