spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇதுவரை பார்த்திராத கிளைமேக்ஸ்.... 'ஜனநாயகன்' படத்தில் சம்பவம் செய்யப்போகும் விஜய்!

இதுவரை பார்த்திராத கிளைமேக்ஸ்…. ‘ஜனநாயகன்’ படத்தில் சம்பவம் செய்யப்போகும் விஜய்!

-

- Advertisement -

‘ஜனநாயகன்’ படத்தின் கிளைமேக்ஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு ஆகிய படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்குகிறார். இதுவரை பார்த்திராத கிளைமேக்ஸ்.... 'ஜனநாயகன்' படத்தில் சம்பவம் செய்யப்போகும் விஜய்!கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கும் விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதேசமயம் படத்திலிருந்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்தது தீபாவளி தினத்தை முன்னிட்டு இதன் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஏகப்பட்ட அப்டேட்டுகள் வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விடுகின்றன.இதுவரை பார்த்திராத கிளைமேக்ஸ்.... 'ஜனநாயகன்' படத்தில் சம்பவம் செய்யப்போகும் விஜய்! அதன்படி தற்போது புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இதுவரை பார்க்காத ஆக்ஷன் காட்சிகள் இருக்கப் போகிறதாம். சட்டமன்றத்திற்கு வெளியில் நடிகர் விஜய் மனித உருவம் கொண்ட ரோபோக்களுடன் சண்டை போடுவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம். பயங்கரமான மக்கள் கூட்டம், புயல் என இதுவரை பார்க்காத அனுபவத்தை தரப்போகிறதாம். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஹைப்பை ஏற்றியுள்ளது. எனவே 2026 ஜனவரி 9 அன்று விஜயின் தரமான சம்பவத்தை காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ