நடிகர் கவின், கிஸ் படம் குறித்து பேசியுள்ளார்.
கவின் நடிப்பில் தற்போது கிஸ் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கவினுடன் இணைந்து பிரபு, தேவயானி, ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க நடன இயக்குனர் சதீஷ் இதனை இயக்கியுள்ளார். ஜென் மார்ட்டின் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். ரொமான்டிக் காதல் படமாக உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து போஸ்டர்கள், பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து சில தகவல்களை நடிகர் கவின் சமீபத்தில் நடந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
#Kiss Plot:
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 17, 2025

அதன்படி அவர், “ரொம்ப பேண்டஸி ரொமான்டிக் – காமெடியாக இல்லாமல் ஜாலியாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். சதீஷ் அண்ணன் லைன் சொல்லும்போதே எனக்கு ஜாலியாக இருந்தது. காதலே பிடிக்காத ஒரு இளைஞன், எந்த காதலர்கள் முத்தம் கொடுப்பதை பார்த்தாலும் அவர்களின் எதிர்காலம் அவன் கண்முன் தெரிகிறது. எனவே அவன் ஒரு பெண்ணை காதலிக்கும் போது காதலியை அவன் கிஸ் பண்ணுவானா? மாட்டானா? என்பதுதான் படத்தின் கதை. இதைதான் டிரைலரிலும் காட்டி இருந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.


