லோகா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் தனது வேப்ஃபரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்த திரைப்படம் தான் லோகா சாப்டர் 1. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நஸ்லேன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டோமினிக் அருண் இந்த படத்தை இயக்கியிருந்தார். சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் வெளியான இந்த படம் இந்திய அளவில் சிறந்த படமாக கருதப்படுகிறது. எனவே மலையாளத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அடுத்தது ‘லோகா சாப்டர் 2’ திரைப்படம் உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதில் டோவினோ தாமஸ் தான் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு படக்குழு லோகா சீரிஸ் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.