பிரபல நடிகை விஜயை விமர்சித்த நிலையில் ரசிகர்கள் பலரும் கொந்தளித்துள்ளனர்.
விஜய் ஒரு நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். தனது 69 ஆவது படமான ஜனநாயகன் படத்திற்குப் பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார் விஜய். விஜயின் அரசியல் வருகைக்கு பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ஜனநாயகன் படத்தை முடித்த விஜய் தொடர்ந்து மாநாடு, பிரச்சாரம் என அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கரூரில் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிலர் விஜய்க்கு ஆதரவாகவும், சிலர் விஜய்க்கு எதிராகவும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் இந்தப் பெருந்துயரத்திற்கு வருத்தம் தெரிவித்தும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர்.
இதற்கிடையில் விஜய், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் பிரபல நடிகை ஓவியா, ‘விஜயை கைது செய்ய வேண்டும்’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, பின்னர் அதை நீக்கி இருந்தார். ஆனால் ஓவியாவின் பதிவு விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. எனவே ரசிகர்கள் ஓவியாவை கடுமையான, நாகரிகமற்ற வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் ஓவியா அசராமல் தனக்கு எதிரான விமர்சனத்தையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது ஸ்டோரியில் பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.