spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsமீண்டும் அம்மனாக மிரட்டும் நயன்தாரா.... 'மூக்குத்தி அம்மன் 2' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மீண்டும் அம்மனாக மிரட்டும் நயன்தாரா…. ‘மூக்குத்தி அம்மன் 2’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.மீண்டும் அம்மனாக மிரட்டும் நயன்தாரா.... 'மூக்குத்தி அம்மன் 2' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் டியர் ஸ்டுடென்ட்ஸ், டாக்ஸிக், ராக்காயி, மண்ணாங்கட்டி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷும், ரௌடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும், அவ்னி சினிமாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு சுந்தர்.சி-யும் இணைந்து தயாரிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. மீண்டும் அம்மனாக மிரட்டும் நயன்தாரா.... 'மூக்குத்தி அம்மன் 2' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!அதன்படி இதில் நயன்தாரா அம்மனாகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்புகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படக்குழு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

we-r-hiring

நயன்தாரா ஏற்கனவே ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் அம்மனாக நடித்து அசத்திருந்தார். எனவே இவர் மீண்டும் அம்மனாக நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ