spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் எப்போது?.... தீயாய் பரவும் தகவல்!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் திருமணம் எப்போது?…. தீயாய் பரவும் தகவல்!

-

- Advertisement -

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் எப்போது?.... தீயாய் பரவும் தகவல்!

we-r-hiring

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேகரித்து வைத்திருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவருடைய நடிப்பில் கடைசியாக ‘கிங்டம்’ திரைப்படம் வெளியானது. மேலும் VD 14 படத்தையும் கைவசம் வைத்துள்ளார். அதேபோல் நேஷனல் க்ரஷாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்திருந்தனர். விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் எப்போது?.... தீயாய் பரவும் தகவல்!மீண்டும் எப்போது இணைந்து நடிப்பார்கள்? என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இருவரும் காதலித்து வருவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதன்படி இருவரும் லிவிங் டு கெதரில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர இருவருமே பல இடங்களுக்கு டேட்டிங் சென்று வருகின்றனர்.விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் எப்போது?.... தீயாய் பரவும் தகவல்! இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் கசிந்தது. இந்நிலையில் இவர்களின் திருமணம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 2026 பிப்ரவரி மாதத்தில் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் திருமணம் எப்போது?.... தீயாய் பரவும் தகவல்!மேலும் தங்களைப் பற்றி பரவலாக பேசப்படும் தகவல் குறித்து இருவருமே இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இருவரும் விரைவில் தங்களின் திருமணம் குறித்து அறிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ