ரவி மோகன் நடித்துள்ள ஜீனி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி. இவருடைய நடிப்பில் கடைசியாக ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர், கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இது தவிர ‘ப்ரோ கோட்’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். மேலும் யோகி பாபுவை வைத்து ‘ஆன் ஆர்டினரி மேன்’ எனும் திரைப்படத்தை தானே தயாரித்து, இயக்க இருக்கிறார் ரவி. இதற்கிடையில் ரவி, அறிமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்கத்தில் ஜீனி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஹை பட்ஜெட்டில் பேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி, தேவயானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் இருந்து ‘அப்டி அப்டி’ எனும் முதல் பாடல் இன்று (அக்டோபர் 7) இரவு 8.10 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.