spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த துருவ் விக்ரமின் பழைய வீடியோ!

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த துருவ் விக்ரமின் பழைய வீடியோ!

-

- Advertisement -

துருவ் விக்ரமின் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த துருவ் விக்ரமின் பழைய வீடியோ!

சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரமின் மகன் தான் துருவ். இவர் ‘ஆதித்ய வர்மா’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படமானது ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தலைப்பில் வெளியான தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதைத்தொடர்ந்து துருவ், விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 17, தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த துருவ் விக்ரமின் பழைய வீடியோ!
அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில் துருவ் விக்ரம், பைசன் திரைப்படம் தான் தன்னுடைய முதல் படம் என்று கூறியிருந்தார். இது ஒரு சர்ச்சையான கூற்றாக பார்க்கப்பட்ட நிலையில் துருவ் விக்ரமின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் துருவ், “ஆதித்யா வர்மா படம் ரீமேக் படம் என்பதால் அது என்னுடைய முதல் படம் இல்லை. மகான் படமும் என் அப்பா படம். அதில் நான் சிறிய கதாபாத்திரம் தான் பண்ணி இருக்கிறேன். அதனால் இதை என்னுடைய இரண்டாவது படமாக பார்க்கவில்லை. இனிமேல் நான் என்ன படம் பண்ணுகிறேனோ அதுதான் என்னுடைய முதல் படமாக எடுத்துக் கொள்வேன்” என்று கூறியுள்ளார். அதாவது துருவ் விக்ரம் இதனை மகான் படத்தின் ப்ரோமோஷனின் போதே கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த துருவ் விக்ரமின் பழைய வீடியோ!
‘பைசன்’ படத்தை நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அப்பிளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் ஆகியோரும் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ