வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி நடிப்பில் கடைசியாக மெய்யழகன் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து கார்த்தி சர்தார் 2, மார்ஷல் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், வா வாத்தியார் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை சூது கவ்வும் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடிக்க, சத்யராஜ் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண், கிரித்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து போஸ்டர்கள், முதல் பாடல், டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்தது. அதன்படி தற்போது ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 2025 டிசம்பர் 5ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் படம் தொடர்பான மற்ற தகவல்கள் வெளியாகும் எனவும் இந்தப் படமும் ‘மெய்யழகன்’ படத்தை போல் கார்த்திக்கு வெற்றி படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.