தேரே இஷ்க் மெய்ன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ் ஏற்கனவே இந்தியில் அறிமுகமாகி ராஞ்சனா (அம்பிகாபதி), அத்ரங்கி ரே (கலாட்டா கல்யாணம்) ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களையும் ஆனந்த் எல் ராய் இயக்கியிருந்தார். அடுத்தபடியாக தனுஷ் மீண்டும் ஆனந்த் எல் ராயுடன் கூட்டணி அமைத்து ‘தேரே இஷ்க் மெய்ன்’ (தமிழில் -தேரே இஷ்க் மே)
எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமும் ராஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய படங்களைப் போல் காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. இதில் க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். கலர் எல்லோ ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அடுத்தது இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.