Homeசெய்திகள்சினிமாஇந்தியில் ரீமேக் செய்யப்படும் 'அருந்ததி'... கதாநாயகி இவரா?

இந்தியில் ரீமேக் செய்யப்படும் ‘அருந்ததி’… கதாநாயகி இவரா?

-

- Advertisement -

அருந்ததி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.இந்தியில் ரீமேக் செய்யப்படும் 'அருந்ததி'... கதாநாயகி இவரா?

கடந்த 2009ஆம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அருந்ததி. இதில் அனுஷ்காவுடன் இணைந்து சோனு சூட், மனோரமா, சாயாஜி ஷிண்டே மற்றும் பலர் நடித்திருந்தனர். கோடி ராமகிருஷ்ணா இதனை இயக்கியிருந்தார். ஃபேண்டஸி ஜானரில் திகில் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அனுஷ்கா இந்த படத்தில் இரண்டு விதமான வேடங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் உருவான இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்தியில் ரீமேக் செய்யப்படும் 'அருந்ததி'... கதாநாயகி இவரா?அதன்படி ஆரம்பத்தில் இந்த படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், நடிகை ஸ்ரீலீலா இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும், இந்த படமானது எப்போது தொடங்கும் என்பது தொடர்பான விவரங்களும் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ