டெல்லி செங்கோட்டை பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் மாலை 6.55 மணியளவில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மேற்றும் போலிசார் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். மேலும் குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்து டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, செங்கோட்டை பகுதியில் என்எஸ்ஜி மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டெல்லி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


