Homeசெய்திகள்சினிமா'கருப்பு' படத்திற்கு முன்பாகவே வெளியாகும் 'சூர்யா 46'?

‘கருப்பு’ படத்திற்கு முன்பாகவே வெளியாகும் ‘சூர்யா 46’?

-

- Advertisement -

சூர்யா 46 திரைப்படம் கருப்பு படத்திற்கு முன்பாகவே வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.'கருப்பு' படத்திற்கு முன்பாகவே வெளியாகும் 'சூர்யா 46'?

சூர்யா நடிப்பில் கடைசியாக ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்தது ரசிகர்கள் பலரும் சூர்யாவின் 45 வது படமான ‘கருப்பு’ திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.'கருப்பு' படத்திற்கு முன்பாகவே வெளியாகும் 'சூர்யா 46'? இதற்கிடையில் சூர்யா, வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜு, ரவீனா டாண்டன் மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.'கருப்பு' படத்திற்கு முன்பாகவே வெளியாகும் 'சூர்யா 46'? இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், சூர்யா 46 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படமானது சூர்யாவின் கருப்பு திரைப்படத்திற்கு முன்பாகவே திரைக்கு வர வாய்ப்பிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஏனென்றால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் எந்த படம் முதலில் திரைக்கு வரும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ