spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலினுக்கு 3 ஸ்ட்ராங்கான ஓட்பேங்க்! விஜய் வெறும் மண்குதிரை! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல் !

ஸ்டாலினுக்கு 3 ஸ்ட்ராங்கான ஓட்பேங்க்! விஜய் வெறும் மண்குதிரை! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல் !

-

- Advertisement -

பீகார் தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணியில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப இடங்களை ஸ்டாலின் வழங்குவார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பீகார் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகார் தேர்தல் முடிவுகள், திமுக கூட்டணியில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதனால் யாருக்கும் பேர வலிமை கூடவோ, குறையவோ இல்லை. ஸ்டாலினே அதை கூட்டணியின் வெற்றி என்று சொல்கிறார். ஸ்டாலின் ஆர்.கே.நகர் தோல்வியை பார்த்து வந்தவர். மக்களவை தேர்தலில் 25 சதவீத வாக்குகளை தான் எடுத்தார். ஒரு எம்.பிக்களை பெறவில்லை. காங்கிரஸ் 4.3 சதவீதம் வாக்குகளை தான் எடுத்தது. ஹெச்.வசந்தகுமாரை தவிர வேறு யாரும் டெபாசிட் கூட வாங்கவில்லை. அவர்களின் ஒட்டுமொத்த பலம் 33 சதவீதம்தான்.

கூட்டணி கணக்குகள் மற்றும் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்பதால் 53 சதவீதம் வந்துவிட்டனர். சட்டமன்றத்தில் 46.5 சதவீதம். தற்போது ஸ்டாலினை முன்னிறுத்தி 47 சதவீதம் வாக்குகள் வருகிறது. இந்த கூட்டணி கணக்கு தான் அவர்களுக்கு வெற்றி. வெற்றி தொடரும் வரை அவர்கள் கூட்டணியாக தொடர்வார்கள். கூட்டணி ஆட்சி என்கிற பேச்சு இனி எடுபடாது. கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப இடங்களை ஸ்டாலின் வழங்குவார். எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி எந்த காலத்திலும் ஸ்டாலினை வீழ்த்த முடியாது. அதேபோல் அவர் இல்லாமலும் ஸ்டாலினை வீழ்த்த முடியாது. எனவே எடப்பாடிக்கான 20 சதவீதம் வாக்குகளுக்கான இடங்களை பாஜவிடம் வாங்கிகொண்டு சென்றுவிட வேண்டும்.

விஜய்க்கு, சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்குகள் செல்வதாக பல்வேறு தரப்பினரும் சொல்கிறார்கள். விஜய், தலித் மக்களுக்கு  ஆதரவாக எதாவது பேசினாரா? அரசியலில் பிரசாந்த் கிஷோரை விட விஜய் மிகவும் மோசமாக இருக்கிறார். அவராவது நொண்டி குதிரை. விஜய் மண் குதிரை. இவரை நம்பி எப்படி தலித் மக்கள் வாக்களிப்பார்கள்? விஜய், தன்னை எம்ஜிஆருடன் ஒப்பிட்டு பேசுகிறார். எம்ஜிஆர் 55 சதவீதம் திமுக வாக்கில் இருந்து வந்தவர்.  கலைஞரின் தவறான வியூகத்தில் முக்குலத்தோரின் ஆதரவில் 55 சதவீதம் வாக்குகளுக்கு திண்டுக்கல் இடைத்தேர்தலிலேயே போய்விட்டார். விஜய் அரசியல் என்பது பச்சோந்தி அரசியலாகும்.

காவலன் படத்திற்கு திரையரங்கம் கிடைக்காமல், சத்யம் திரையரங்கை உதயநிதி கொடுத்தார். தலைவா படத்திற்கு டைம் டு லீட் என்கிற வார்த்தையை அழித்ததற்காக மோடியை சென்று சந்தித்தார். ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது,  ராகுல்காந்தியிடம் ராஜ்யசபா இடத்திற்காக போய் நின்றார். சரத்குமாரை போல கலைஞர், ஜெயலலிதா என்று பல கட்சி மாறியவர் விஜய். விஜயிடம் 40 வேட்பாளர்களுக்கு மேல் கிடையாது. பிரசாந்த் கிஷோரை விட மிகவும் மோசமான நிலையில் அவர் உள்ளார்.

சிறுபான்மை மக்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். அவர்கள் திமுக, காங்கிரசுக்கு தான் வாக்களிப்பார்கள். விஜய்க்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். திமுக கூட்டணியின் பலமே, பாஜகவுக்கு எதிரான கிறிஸ்தவ, முஸ்லீம் வாக்காளர்கள்தான். பாமகவுக்கு எதிரான தலித் மக்களின் வாக்குகள். சீமானுக்கு எதிரான பிற மொழியாளர்கள் வாக்குகள் ஆகும். ஸ்டாலின் தெளிவாக 45 சதவீதம் வாக்குகளில் இருக்கிறார். அன்புமணி, வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை முன்வைத்து போராட்டம் அறிவித்துள்ளார். ஸ்டாலினை பொறுத்தவரை நாடார்கள், தேவேந்திர குல வேளாளர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கான அரசியலை செய்கிறார்.

ஆனால் வன்னியர்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு உள்ளது. அவர்கள் எடப்பாடி பழனிசாமியை வன்னியராக நினைக்கிறார்கள். இதை குறைக்கும் விதமாகவே படையாட்சி சிலைக்கு மாலை அணிவிக்கிறார். முக்குலத்தோர் வாக்குகள் இன்னும் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு வாக்குகளாக தான் இருக்கிறது. அதை சீமான், ஸ்டாலின் போன்றவர்கள் எடுக்க முயற்சிக்கிறார்கள். முக்குலத்தோர் மக்கள் எடப்பாடியை ஏற்றுக்கொள்ளாதது நமக்கு லாபம் தான் என்று ஸ்டாலின் நினைக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ