Homeசெய்திகள்சினிமாஷூட்டிங்க்கு தயாராகும் 'சூர்யா 47' டீம்.... ரிலீஸ் எப்போது?

ஷூட்டிங்க்கு தயாராகும் ‘சூர்யா 47’ டீம்…. ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

சூர்யா 47 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ஷூட்டிங்க்கு தயாராகும் 'சூர்யா 47' டீம்.... ரிலீஸ் எப்போது?

சூர்யா தற்போது ‘கருப்பு’ மற்றும் ‘சூர்யா 46’ ஆகிய படங்களை கவனம் செலுத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து தனது 47வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யா 47 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யா புதியதாக தொடங்க இருக்கும் ‘ழகரம்’ தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கப்போவதாகவும், இதில் நடிகர் சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. அடுத்தது சுசின் ஷியாம் இதற்கு இசையமைக்கப் போகிறாராம். இந்த படத்தில் நஸ்ரியா, நஸ்லேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் பகத் பாசில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.ஷூட்டிங்க்கு தயாராகும் 'சூர்யா 47' டீம்.... ரிலீஸ் எப்போது? இது தவிர இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி கேரளாவில் பூஜையுடன் தொடங்க இருக்கிறதாம். அதற்கான செட் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதாவது 2026 இரண்டாம் பாதியில் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

MUST READ