spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சார்பில் தர்ணா போராட்டம்….

நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சார்பில் தர்ணா போராட்டம்….

-

- Advertisement -

பொள்ளாச்சியில் கருப்பு பட்டை அணிந்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சார்பில் தர்ணா போராட்டம்….டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க  நாளை நினைவு கூறும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில்  தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கு பெற்ற அரை நாள் கருப்பு பட்டை அணிந்து தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள், விவசாயப் பொருளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதை சட்டமாக்க வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதா 21-ஐ கைவிட வேண்டும், விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

we-r-hiring

மேலும் இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “தேர்தலின் போது விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்ற வில்லை எனவும், வனவிலங்குகளின் கொள்கைகள் குறித்து தேசிய அளவில் நிலையான கொள்கை வகுக்கவில்லை எனவும், விவசாயிகளின் பிரச்சனைகளை அரசு தீர்க்காவிட்டால் வரும் தேர்தலில் விவசாயிகள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தனர்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!

 

MUST READ