spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஉண்மை சம்பவக் கதையில் அனுபமா.... எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் 'லாக் டவுன்' டிரைலர்!

உண்மை சம்பவக் கதையில் அனுபமா…. எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் ‘லாக் டவுன்’ டிரைலர்!

-

- Advertisement -

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக் டவுன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.உண்மை சம்பவக் கதையில் அனுபமா.... எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் 'லாக் டவுன்' டிரைலர்!

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர், லாக் டவுன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஒரு நபர் அனுபவிக்கும் துயரங்களை மையமாக வைத்தும், அந்த சமயத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்தும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவக் கதையில் அனுபமா.... எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் 'லாக் டவுன்' டிரைலர்!இதனை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ஜீவா இயக்கியுள்ளார். என்.ஆர். ரகுநந்தனும், சித்தார்த் விபினும் இதற்கு இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், இந்துமதி மற்றும் பலர் அனுபமாவுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டீசர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது டிரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

we-r-hiring

இந்த டிரைலரை பார்க்கும்போது அனுபமாவின் வாழ்க்கையில் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட, அந்த நேரத்தில் ஊரடங்கு போடப்படுகிறது. அதன் பிறகு பல சிக்கல்களை கடந்து எப்படி தன்னுடைய பிரச்சனையை தீர்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை போல் தெரிகிறது. இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ