சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 30ஆம் தேதி சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான ‘பத்து தல’ திரைப்படம் வெளியானது. படத்தில் ப்ரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ஏஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் பென் ஸ்டுடீயோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருந்தனர்.
சிம்பு படத்தின் கேங்ஸ்டராக மாஸ் காட்டினார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘பத்து தல‘ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 27-ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘பத்து தல’ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர் பாக்காதவங்க பாத்து என்ஜாய் பண்ணுங்க!