spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதிரடிக் காம்போ இஸ் பேக்... மீண்டும் இணைந்த ஹரி- விஷால் கூட்டணி!

அதிரடிக் காம்போ இஸ் பேக்… மீண்டும் இணைந்த ஹரி- விஷால் கூட்டணி!

-

- Advertisement -

இயக்குனர் ஹரி மற்றும் விஷால் கூட்டணி மீண்டும் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கமர்சியல் இயக்குனர்கள் ஒருவர் ஹரி. அவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிரடி ஆக்ஷன் படங்களாக இருக்கும்.

we-r-hiring

இந்நிலையில் இயக்குனர் ஹரி அடுத்ததாக விஷால் உடன் புதிய படத்திற்காக கூட்டணி அமைக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ஹரி- விஷால் கூட்டணியில் வெளியான இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனவே இந்தப் படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவும் என்று தெரிகிறது.

இதற்கிடையில் விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில்  நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

MUST READ