spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇருமல் மருந்து விவகாரம்… உரிமையாளரின் 2.04 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி

இருமல் மருந்து விவகாரம்… உரிமையாளரின் 2.04 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி

-

- Advertisement -

இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கு தொடா்பாக இருமல் மருந்து உரிமையாளருக்கு சொந்தமான 2.04 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.இருமல் மருந்து விவகாரம்… உரிமையாளரின் 2.04 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடிஉத்தர பிரதேச மாநிலத்தில் கோல்ட் ரிப் என்ற இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதன் உரிமையாளர் ரங்க நாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து, சுங்குவார் சத்திரத்தில் உள்ள இருமல் மருந்து ஆய்வகம், கோடம்பாக்கத்தில் உள்ள உரிமையாளர் வீடு, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனுக்கு தொடர்புடைய 2.04 மதிப்புடைய கோடம்பாக்கத்தில் இருக்கக்கூடிய அடுக்கு மாடி குடியிருப்பு வீடு உள்ளிட்ட இரண்டு அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி இருப்பதாக தெரிவித்தனா். மத்திய பிரதேச போலீசார் ரங்கநாதனின் ஸ்ரீசன் மருந்து நிறுவனம் பாதுகாப்பு வரம்பை மீறி கலக்கப்பட்ட வேதி நச்சு பொருட்கள், தரமில்லா உற்பத்தி முறைகளால் ஏற்பட்டதாக ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. ஸ்ரீசன் நிறுவனம் தரமான மூலப்பொருட்களுக்கு பதிலாக தரமற்ற ரசாயனங்களை மருந்து தயாரிப்பில் பயன்படுத்தியதும், தர சோதனை இல்லாமல் மூலப்பொருட்களை பில் இல்லாமல் வாங்கப்பட்டதும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

தயாரிப்பு செலவை குறைத்து அதிக லாபம் அடைய இந்த முறைகேடுகளை செய்ததும், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆண்டுதோறும் நடத்த வேண்டிய அதிகாரப்பூர்வ ஆய்வுகள் நடைபெறவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை 10 இடங்களில் நடத்திய சோதனையில், பண மோசடி மற்றும் தரமற்ற மருந்து உற்பத்தியை சேர்ந்த முக்கிய ஆவணங்கள், ரசாயனங்கள், உற்பத்தி பதிவுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் ரங்கநாதன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 2.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கிய நிலையில் மேலும் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

கரூர் விவகாரம்… நீதிபதி தலைமையிலான மூவர் குழு இரண்டாவது நாளாக ஆய்வு…

MUST READ