பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது.
கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாகம் வெளியாக ரசிகர்கள் மத்தியில அமோக வரவேற்பு பெற்றது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
இரண்டு பாகங்களுக்கும் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது.
இரண்டாம் பகுதி 28ல் !
என்னுடையப் பகுதி மிகுதியோ அல்லது
குறைவோ(screen space)யாமறியோம்!Trailer-ஐ காண்கையில் குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.வானத்தில் பிறை போல அளவில் குறைவேயாயினும் நிறைய நட்சத்திரங்களுடன் பங்குப் போட்டு வானத்தை அழகாக்கியதில் மகிழ்வே!Max நண்பர்களோடு IMAX-ல் முதல்… pic.twitter.com/sE6hcOM8xx— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 24, 2023
“இரண்டாம் பகுதி 28ல் ! என்னுடையப் பகுதி மிகுதியோ அல்லது குறைவோ(screen space)யாமறியோம்!Trailer-ஐ காண்கையில் குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.வானத்தில் பிறை போல அளவில் குறைவேயாயினும் நிறைய நட்சத்திரங்களுடன் பங்குப் போட்டு வானத்தை அழகாக்கியதில் மகிழ்வே!Max நண்பர்களோடு IMAX-ல் முதல் நாளே பார்க்கிறேன். திரையில் சந்திப்போம் நண்பர்களே!” என்று தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.