spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயின் ஈரோடு பயணத்தில் சிக்கல்! சிபிஐ-யால் பெரும் நெருக்கடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

விஜயின் ஈரோடு பயணத்தில் சிக்கல்! சிபிஐ-யால் பெரும் நெருக்கடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

கரூர் கூட்டநெரில் வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறபோது, அதில் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட சதிக் கோட்பாடுகள் எதுவும் இடம்பெறாது. அது விஜய் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விஜய் ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஈரோட்டில் நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக புதுச்சேரி கூட்டத்தில் பேசிய விஜய், அம்மாநில காவல்துறையை பார்த்து தமிழ்நாடு காவல்துறை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். கரூர் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக விஜய், காவல்துறையினரை பாராட்டவே செய்தார். அந்த நிகழ்வில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு யார் காரணம்? என்று இன்று வரை ஒரே ஒரு எப்.ஐ.ஆர் தான் உள்ளது. கருர் நகர போலீசார் போட்ட அந்த எப்.ஐ.ஆரில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லாம் தவெகவினர் தான். ஆனால் அவர்கள் அந்த பிளேட்டை அப்படியே மாற்றி உயிரிழப்புகளுக்கு காரணம் காவல்துறையின் அஜாக்கிரதை என்று சொன்னார்கள்.

புதுச்சேரியில் காவல்துறை சிறப்பாக ஏற்பாடு செய்தது என்று விஜய் ஒப்பிட்டு பேசினார். டிச.27-க்குள் வழக்கில் கரூர் கூட்டநெரிசல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐ விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அவர்கள் விஜயை விசாரிக்கப் போகிறார்கள். அதேநேரம் விஜயை கரூருக்கு அழைத்து விசாரிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டார்கள். அதனால் விஜய் ஈரோடு பயணம் முடிந்ததும், சென்னைக்கு வந்து விசாரிப்பார்கள்.

விஜயிடம் விசாரணை அறிக்கை பெற்ற பிறகு குற்றப் பத்திரிகையை ஓய்வுபெற்ற நீதிபதி ரஸ்தோகியிடம் வழங்குவார்கள். அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு போய்விடுவார்கள். இதில் எந்த இடத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றப் பத்திரிகையில் தான் சிபிஐ சொல்ல வேண்டும். அப்படி குற்றம்சாட்டினாலும் விஜய் தரப்பு மீதும் குற்றச்சாட்டு எழும். எனவே அது விஜய்க்கு அணுகூலம் கிடையாது. அது அவருக்கும் தெரியும். அதனால் ஈரோடு கூட்டத்தை விஜய் இதற்காக பயன் படுத்துகிறார்.

ஈரோடுக்கு விஜய் வரும்போது, கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கும். ஏற்கனவே அவர் கரூரில் தான் அசம்பாவிதம் நடந்தது. மற்ற இடங்களில் அப்படி நடக்கவில்லை என்று சொல்லியிருந்தார். தற்போது ஈரோடு கூட்டத்திலும் அசம்பாவிதம் நடக்கவில்லை பாருங்கள் என்று பொதுவெளியில் சொல்லுவார். அடிப்படையில் வேறுபாடு என்ன என்றால் விஜயுடைய தாமதம் மற்றும் சாலை உலா ஆகியவைதான். கட்டுக்கடங்காத கூட்டத்தை ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு அவர்களிடம் கிடையாது.

தற்போது செங்கோட்டையன் ஒருங்கிணைக்கும் கூட்டத்தில் சாலை உலா கிடையாது. கியூ.ஆர். கோடு மூலம் அனுமதி. 30 ஆயிரம் பேர் வருவார்கள் என்று சொல்கிறார்கள். அனேகமாக பேருந்தில் தான் வர திட்டமிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் கரூர் கூட்டத்திற்கும், ஈரோடு கூட்டத்திற்கும் அரசியல் ரீதியான ஒப்பீட்டை கொடுக்க விஜய் விரும்புகிறார். ஆனால் பார்க்கும் அனைவருக்கும் தெரியும், அது மிகவும் ஒருங்கிணைக்கப்படாத கூட்டம், வேண்டுமென்றே விஜய் செய்த கால தாமதம் ஆகியவை தான் அசம்பாவிதத்திற்கு காரணம் என்று. அவர் தனி விமானத்தில் சரியான நேரத்தில் புறப்பட்டு, சரியான நேரத்திற்கு வந்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. தற்போது ஈரோடு கூட்டத்திற்கு சரியான நேரத்திற்கு விஜய் வருவார். காரணம் புதுச்சேரி கூட்டத்திற்கு சரியான நேரத்திற்கு விஜய் சென்றார். அதேபோல் மற்ற கூட்டங்களுக்கும் செல்ல வேண்டும்.

மக்கள் கூட்டம் வருவதற்காக காத்திருந்தார். கியூ.ஆர். கோடுக்கு இருவர் அனுமதிக்கப்படுவதாக ஈஷாசிங் ஐ.பி.எஸ் வாக்குவாதம் செய்தார். அதை நாம் எல்லோரும் பார்த்தோம். விட்டிருந்தால் அவர் அடித்திருப்பார். 40 பேர் மரணத்திற்கு நீங்கள் தான் காரணம் என்று நேரடியாகவே சொல்லிவிட்டார். அதற்கு பிறகு காத்திருந்து நேரடியாக பேசி, போய்விட்டார். அவருடைய 10 நிமிட பேச்சில் என்ன அரசியல் மெசேஜ் கொடுத்தார் என்று தெரியவில்லை. ஈரோட்டில் என்ன அரசியல் மெசேஜ் கொடுக்கப் போகிறார் என்று நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக நாளிதழ்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதில் பெரிதாக பாதிக்கப்பட போவது விஜய் வாக்கு வங்கிதான். விஜய்க்கு, ஈரோடு கூட்டத்திற்கு 35 ஆயிரம் பேர் வருகிறார்கள். எவ்வளவு பிரம்மாண்டமான கூட்டம் பார்த்தீர்களா? என்பார்கள். ஆனால் திருவண்ணாமலையில் நடந்த திமுக மண்டல மாநாட்டில் 1.30 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். 1.30 லட்சம் சேர் போடுகிறார்கள். அனைவருக்கும் உணவு தருகிறார்கள். ஆனால் அதைவிட 35 ஆயிரம் பேர் வருவது பெரியது என்று நினைக்கிறார்கள். புதுச்சேரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு, குடிநீர் தரப்படவில்லை. வெயில் நேரத்தில் நடைபெற்றது. அதேபோல் ஈரோடு கூட்டமும் ஏறு வெயில் நேரத்தில் நடைபெறுகிறது. திமுக கூட்டத்தை போன்று சேர் வசதியோ, உணவு, குடிநீர் போன்ற எந்தவித அடிப்படை வசியோ இல்லாமல் விஜய் கூட்டத்தை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தை பிரம்மாண்டமான கூட்டம் என்றால், அது மிகைப்படுத்தப்பட்டது அல்லது அரசியல் அறியாமை என்றுதான் நினைக்கிறேன். அதேபோல் கரூர் கூட்டத்தை, ஈரோடு கூட்டத்துடன் ஒப்பிட்டு பேசினாலும் அதுவும் அரசியல் அறியாமைதான். ஒட்டுமொத்தமாக இந்த கனவுக்கே எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை பெரிய அடிகொடுக்கப் போகிறது. மேலும், விஜய் குறிவைக்கும் ஜென்ஸீ தலைமுறையினர் எல்லோரும் வெளியூர்களுக்கு சென்றவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள், விண்ணப்பத்தை திருப்பி அளிக்காதவர்கள் போன்ற கேட்டகிரியில் வருகிறார்கள்.

கரூர் விவகாரம் : 3டி லேசர் ஸ்கேனர் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!!

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தொடங்கினால் விஜய்க்கு நெருக்கடி ஏற்படும். கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பிறகு அவர்கள் வைத்த எந்த வித குற்றச்சாட்டும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற வாய்ப்பு இல்லை. காவல்துறையினரின் மெத்தனப் போக்கு என்கிற குற்றச்சாட்டு சதியில் வராது. சதி என்பது ஒரு நோக்கத்திற்காக நடைபெறுவது. அப்படி பார்த்தால் விஜய் தான் வேண்டுமென்றே தாமதமாக வந்தார். தவெக தரப்பில் செந்தில் பாலாஜி தான் சதியில் ஈடுபட்டார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படும் நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக இதுவரை நடந்த சிபிஐ விசாரணையில், விசாரணை பட்டியலோ அல்லது விசாரணை வளையமோ எதுவும் செய்யவில்லையே.

இந்த விவகாரத்தில் ஒரே ஒரு எப்ஐஆர் மட்டுமே இருப்பதால், விஜய் புதிய சதிக் கோட்பாட்டை கொண்டுவர முடியாது. அதனால் ஈரோட்டில் சிறப்பாக நடத்தினோம். கூட்டத்தை நடத்தும் திறன் எங்களிடம் உள்ளது. ஆனால் கரூரில் அவர்கள் தான் கூட்டத்தை கெடுத்தார்கள் என்று அரசியல் ரீதியாக சொல்வார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ