Homeசெய்திகள்வானிலைஅடுத்த 7 நாட்களுக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 7 நாட்களுக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்

-

- Advertisement -

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது.அடுத்த 7 நாட்களுக்கும் தமிழகத்தில்  வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 25-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரியமாற்றம் ஏதுமில்லை. எனினும், வெப்பநிலை சற்று குறையக்கூடும். இன்று முதல் 23ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

we-r-hiring

இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்  உறைபனி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை!

MUST READ