முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தாா்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அதிமுகவை மீட்கப்போவதாக கூறி வந்தனர். அமித்ஷா உத்தரவின்பேரில் தனிக்கட்சி தொடங்கும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ளார். இது வைத்திலிங்கத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் திமுகவில் இன்று இணைய முடிவு எடுத்துள்ளார். திமுகவில் இணைவதற்கு முன்பு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தாா். முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் தனது மகனோடு திமுகவில் இணைந்தாா். இவருடைய இந்த முடிவுக்கு செந்தில் பாலாஜிதான் மூளையாக இருந்ததாக பேசப்படுகிறது.
இவரைத் தொடா்ந்து ஓபிஎஸ் ஆதரவாளா்கள் வெல்லமண்டி நடராஜனும், குன்னம் ராமச்சந்திரனும் விரைவில் திமுகவில் இணையலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -
