Homeசெய்திகள்அரசியல்அந்தர் பல்டி அடித்த டி.டி.வி.தினகரன்… கூட்டணி குறித்த அறிவிப்பு…

அந்தர் பல்டி அடித்த டி.டி.வி.தினகரன்… கூட்டணி குறித்த அறிவிப்பு…

-

- Advertisement -

அதிமுக,பாஜக கூட்டணியில் அ.ம.மு.க இணைவதாக டி.டி.வி. தினகரன் அதிகார்ப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.அந்தர் பல்டி அடித்த டி.டி.வி.தினகரன்… கூட்டணி குறித்த அறிவிப்பு…

சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக மீண்டும் இணைவது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள், தலைமைச் கழக நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

we-r-hiring

கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், அதிமுக–பாஜக கூட்டணியில் அமமுக இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்கவும், ஜெயலலிதா ஆட்சி அமைய ஓரணியில் திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், எங்களுக்குள் இருந்தது பங்காளி சண்டைதான் என்றும், விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போக மாட்டாா்கள் எனக் கூறிய டி.டி.வி. தினகரன், அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளாா்.

மேலும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இருந்து விலகியதாக அறிவித்த டிடிவி தினகரன் மீண்டும் அக்கூட்டணியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும்,  துரோகத்துக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் எடப்பாடிக்கு தான் தர வேண்டும் என கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அதிமுக 3 வது இடத்துக்கு செல்லும் என தொடந்து கூறிவந்த டி.டி.வி.தினகரன்,  சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை ரகசியமாக சந்தித்து திரும்பிய நிலையில் இந்த  திடீர் பல்டி அடித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெறித்து ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சம்பவம் செய்த ஸ்டாலின்! சட்டமன்றத்தில் நடந்த கூத்து! நாதன் நேர்காணல்!

MUST READ