spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்”கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் ” – தமிழிசை சௌந்தரராஜனுக்கு வீரபாண்டியன் அறிவுறுத்தல்…

”கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் ” – தமிழிசை சௌந்தரராஜனுக்கு வீரபாண்டியன் அறிவுறுத்தல்…

-

- Advertisement -

நேரம் கிடைக்கும் போது கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் குறித்த புத்தகங்களை தமிழிசை சௌந்தரராஜன் படிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.”கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் ” – தமிழிசை சௌந்தரராஜனுக்கு வீரபாண்டியன் அறிவுறுத்தல்…

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நாட்டின் 77 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்.

we-r-hiring

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேசியதாவது, அச்சுறுத்தி, மிரட்டி சில கட்சிகளை NDA கூட்டணியில் இணைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்தில் முகாமிட்டாலும், திமுகவை வீழ்த்த முடியாது எனத் தெரிவித்தார்.

மேலும், திமுக வெற்றி பெறுவது வெறும் கூட்டணி பலத்தால் மட்டுமல்ல. மக்கள் நலத் திட்டங்களும், மத அரசியலுக்கு எதிரான மக்கள் மனநிலையும் அதற்குக் காரணம். ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும் முகாமிட்டாலும் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்றார்.

அடிமைத் தலைகளை மீட்ட இயக்கமே கம்யூனிஸ்ட் இயக்கம். அந்தமான், அலிகார் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் தண்டனை அனுபவித்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். அந்த தியாகங்களை மறக்க முடியாது எனக் கூறினார்.

மேலும், திமுக கூட்டணிக் கட்சிகளை அடிமைகளாக வைத்துள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்த கருத்துக்கு பதிலளித்த வீரபாண்டியன், இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன், கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் குறித்த புத்தகங்களை நேரம் ஒதுக்கி படித்தால் புரிதல் வரும் என விமர்சித்துள்ளாா்.

விஜய் அரசியலில் Zero…தனியாக இருந்தால் ஜீரோவுக்கு மதிப்பில்லை – தமிழிசை விமர்சனம்…

MUST READ