spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் கத முடிஞ்சது! இனிதான் ஆட்டமே களைகட்டும்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

விஜய் கத முடிஞ்சது! இனிதான் ஆட்டமே களைகட்டும்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி ஏற்பட்டால் அது ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

விஜய் மீது அதிமுகவினர் விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அதிமுகவை ஊழல்வாதிகள் கட்சி என்று விமர்சித்த தவெக தலைவர் விஜயை, அதிமுக சமூக ஊடகப்பிரிவு கடுமையாக விமர்சித்துள்ளது. கரூர் கூட்டநெரிசல் மரணங்களுக்கு அவரும் ஒரு காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. கரூர் சம்பவத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், எந்த தலைவரும் தன்னுடைய தொண்டர் இறப்பதை விரும்ப மாட்டார்கள்… என்று விஜய்க்கு ஆதரவாக பேசியபோது, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து சம்பத்திற்கு  திமுக அரசு தான் காரணம் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இந்த சூழலில் அதிமுக விஜய் மீது குற்றம்சாட்டியுள்ளது. விஜய் கூட்டணிக்கு வருவார் என்று அதிமுகவினர் எதிர்பார்த்தனர். அவர் வராததால் இந்த பழம் புளிக்கும் என்றாகி விட்டது. இனி விஜய் Vs அதிமுக, விஜய் Vs அதிமுக என்றாகும். இதன் மூலம் விஜய்க்கு எதிரான வாக்குகள் பிரியும் என்பதால் தவெகவுக்கு அது நல்லது என்கிறார்கள். விஜய்க்கு என்ன வாக்கு வங்கி உள்ளது, அவருக்கு எதிரான வாக்குகள் பிரிவதற்கு?

எம்ஜிஆரை போல இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால் விஜய்க்கு இருக்கும் வாக்கு வங்கியை புரிந்து கொள்ளலாம். பல இடைத்தேர்தல்கள் வந்தன. எதாவது ஒன்றில் போட்டி போட்டு தவெக வென்றிருக்க வேண்டுமல்லவா?. 2024 மக்களவை தேர்தலிலேயே போட்டியிட்டிருக்கலாம். பிரதமர் பதவி எங்கள் நோக்கம் அல்ல. வந்தால் முதலமைச்சர் ஆக தான் வருவார் என்றால்? எதற்காக நீங்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற கேள்வி எழும். விஜயை, அதிமுக விமர்சித்துள்ள நிலையில், தமிழிசை போன்ற பாஜக தலைவர்கள் கூட்டணிக்கு அழைக்கிறார்கள். தன்னை முதலமைச்சர் வேட்பாளர் அல்லது துணை முதலமைச்சர் என்று சொல்லும் நபர்கள் குறைந்தபட்சம் 100 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும். அதிமுக கூட்டணியில் இடம் எங்கே உள்ளது? எப்போதும் நான்கு அணிகள் உருவாகினால், தன்னாலே ஐந்தாவது அணியும் உருவாகிவிடும். மற்ற கட்சிகளில் இடம் கிடைக்காதவர்கள் 5வது அணியில் போட்டியிடுவார்கள். பொதுவாக தேர்தல்களில் மூன்று, நான்கு அணிகள் உருவாகி விட்டால் முதல் அணிக்கும், இரண்டாவது அணிக்குமான வாக்கு வித்தியாசம் 5 சதவீதத்திற்கும் மேலாக சென்றால் முதல் அணிக்கு 150 முதல் 190 இடங்கள் கிடைக்கும். விஜய் இல்லை என்று இன்றைய சூழலில் என்னால் அடித்து சொல்ல முடியும்.

பாஜகவின் கணக்கு என்பது வடஇந்திய கணக்கு. அங்கே சித்தாந்த அரசியல் கிடையாது. முதல் நாள் வரை ஒருவருடன் சண்டை போட்டுவிட்டு, மறுநாள் அவருடன் கூட்டணி சேர்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சித்தாந்த அரசியல் இருக்கிறது. தேர்தல் என்பது கருத்தியல் போர். கலாச்சார யுத்தம் ஆகும். கடைசி நேரத்தில் கூட்டணி வைத்தாலும் அது விமர்சனமாக பார்க்கப்படும். கூட்டணி வைக்காவிட்டாலும் கேள்வி எழுப்புவார்கள். அதேநேரம் கூட்டணிக்குள் தொடர்ந்தால் விமர்சனங்கள் எழாது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்கிறது. அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், அவை பெரிய அளவுக்கு வராது. ஆனால் காங்கிரஸ் விஜயுடன் சென்றால், அவர்கள் மீதான விமர்சனங்கள் எழும். எனவே விஜய் தனித்து போட்டியிடுகிறார் என்றால், அவர் சீமான் போன்று தனித்தே தான் போட்டியிட்டு கொண்டிருக்க வேண்டும்.

திமுகவிடம் இருக்கும் சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகளை விஜய் பிரிப்பார் என்ற வாதம் வைக்கப்படுகிறது. என்னை பொருத்தவரை தமிழ்நாட்டில் அப்படியான வாக்கு வங்கிகள் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் திமுக வாக்குவங்கி, அதிமுக வாக்குவங்கி மற்றும் தற்போது ஒரு இந்துத்துவா வாக்கு வங்கி உருவாகி வருகிறது. இதற்குள்ளாக தான் அனைத்து வாக்கு வங்கிகளும் உள்ளன. சிறுபான்மை மக்கள் முழுமையாக திமுகவுக்கு வாக்களிப்பதும் கிடையாது. அனைத்து அரசியலும் உள்ளுர் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டது. நகரமாக இருந்தால் கவுன்சிலரின் நடவடிக்கைகளை வைத்தும், கிராமங்களாக இருந்தால் கட்சியினரின் நடவடிக்கைகளை வைத்தும் மக்கள் வாக்களிப்பார்கள். அதற்கு பிறகுதான் மற்ற பிரச்சினைகள் வரும். அதையும் விஜய் மறைமுகமாக கட்சியினரிடம் கூறியுள்ளார். மக்களின் ரேஷன் அட்டை பிரச்சினை உள்ளிட்டவற்றை பார்க்க வேண்டும் என கட்சியினருக்கு ஆனந்த் சொன்னார். அரசியலில் இது பால பாடமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ