spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅண்ணாமலை - இபிஎஸ் பயங்கர சண்டை! தேமுதிக IN - ராமதாஸ் OUT! சீட் பகிர்வில்...

அண்ணாமலை – இபிஎஸ் பயங்கர சண்டை! தேமுதிக IN – ராமதாஸ் OUT! சீட் பகிர்வில் திமுக கிங்! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிபந்தனைகளில் திமுகவிடம் ராஜ்ய சபா இடங்கள் மட்டுமின்றி, உள்ளாட்சி பதவிகளில் 20 சதவீத பதவிகளை காங்கிரஸ் கேட்பதாகவும், இது ஏற்புடையது அல்ல என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், எந்த கட்சிக்கு எவ்வளவு இடங்கள் வழங்க வாய்ப்புகள் உள்ளன என்பதை  விளக்கி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :- திமுக கூட்டணியில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு 6 இடங்களும், சில இடங்களில் மட்டுமே செல்வாக்கு உள்ள கட்சிகளுக்கு ஓரிரு இடங்கள் என 30 சீட்டுகள் போய்விடும். காங்கிரசுக்கு 25 இடங்கள் கொடுத்தது போக திமுக 170 இடங்களில் நிற்க வேண்டும். எனவே புதிய வரவுகளுக்கு திமுக கூட்டணியில் 7 இடங்கள் வரை தான் இருக்கும்.

we-r-hiring

கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் இது தான் எதார்த்தம். இல்லாவிட்டால் திமுக இன்னும் குறைத்து 160 இடங்களில் போட்டியிட வேண்டி வரும். திமுக 2 முறை தொகுதிகளை குறைத்து போட்டியிட்டபோது எடுபடவில்லை. 2016 தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அது கட்சியினருக்கு உற்சாகத்தையும்,  வெற்றியையும் வழங்கியது. பொதுவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதுபோன்ற முடிவுகளை எடுப்பதில்லை. அவர் அனைவரையும் அரவணைத்து செல்லும் அரசியல் செய்கிறார்.

ஒரு தொகுதியில் நமக்கு உள்ள பாரம்பரிய வாக்குகளை எவ்வளவு உள்ளது. அந்த வாக்குகளை வைத்து வெற்றி பெற முடியுமா? என திமுகவினர் பார்ப்பார்கள். எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்திருப்பதால் வெற்றி பெற முடியாது. வெற்றி பெற ஒரு சில சதவீதம் வாக்குகள் தேவை என்று வரும்போது, தேமுதிகவை கூட்டணிக்கு சேர்ப்பார்கள். தேமுதிகவின் சராசரி என்பது 0.5 சதவீதம் ஆகும். ஆனால் அவர்கள் 60 தொகுதிகளில் தான் போட்டியிட்டனர். 234 தொகுதிகளுக்கு பிரித்து பார்க்கும்போது குறைவாகவே வரும். அதேவேளையில் 60 தொகுதிகளில் அவர்கள் வாங்கியுள்ள வாக்குகளின் அளவை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

அதன்படி, கடந்த முறை 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேலாக 20 தொகுதிகளில் தேமுதிக வாங்கியுள்ளது. அதில் 8 தொகுதிகள் வரை தேமுதிகவுக்கு கொடுத்துவிட்டு, மற்ற 12 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் வாய்ப்புகள் இயல்பாகவே வருகிறது. இவை தவிர்த்து சில தொகுதிகளில் 5000 வாக்குகள் வரை வாங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் அக்கட்சிக்கு கிளை அமைப்புகளை வைத்துள்ளது. 4 சதவீதம் வைத்திருக்கும் பாமகவுக்கு 20 இடங்கள் வழங்கிட காரணம் 60 வன்னியர் தொகுதிகளில் அவர்கள் 15 இடங்களில் வென்றாலும், எஞ்சிய 45 இடங்களில் நாம் வெல்லாம் என்பதால்தான். எனவே சராசரியை வைத்து கூட்டணியை கணக்கிடுவது கிடையாது.

தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அணணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலில் அண்ணாமலை தலைமையில் தான் என்.டி.ஏ. கூட்டணி அமைக்கப்பட்டது. 18 சதவீதம் வாக்குகளை பாஜக வாங்கியது. அதிமுக 22 சதவீதம் வாங்கியது. எனவே மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பாஜகவுக்கு வழங்க வேண்டும் என அண்ணாமலை கேட்டார். அதிமுக எப்போது 120 இடங்களுக்கு கீழ் நிற்கிறதோ, அப்போது அதிகாரப் பகிர்வை நோக்கி தான் செல்கிறது என்று தான் அர்த்தம். இந்த விவகாரத்தில் திமுக எச்சரிக்கையோடு உள்ளது. பொதுவாக தேர்தல் நேரத்தில் கட்சியில் இருக்கும் மனவருத்தங்களை யாரும் பொதுவெளியில் பேச மாட்டார்கள். எனவே தனது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

இதை குழந்தைகள் கூட நம்பாது. பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை காரணம் காட்டி அரசியல்வாதி தேர்தல் பணியில் இருந்து விலக முடியாது. செய்தியாளர்களை அழைத்து நான் நயினார் நாகேந்திரனிடம் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக கூறியுள்ளேன் என அண்ணாமலை சொல்கிறார். கட்சிக்குள் நடைபெறும் விஷயங்களை அவர் வெளியில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதில் மறைமுகமாக சொல்வது என்ன என்றால் பாஜக, அதிமுக கூட்டணியில் அதிக இடங்கள் வாங்க வேண்டும் என்பதுதான். அதற்கு கட்சி தலைமை சம்மதிக்காததால் அவர் விலகியுள்ளார்.

ஆடியோ -வீடியோ! சந்தி சிரிக்கும் திமுக கமிஷன் விவகாரம்
அண்ணா அறிவாலயம்

கள எதார்த்தப்படி திமுக 160 இடங்களில் நின்றால், 74 இடங்களை விட்டுத்தர முடியும். காங்கிரசுக்கு 5 இடங்கள் அதிகரித்து, 30 இடங்கள் வழங்கனால் அந்த விகிதாச்சாரத்தை மற்ற கட்சிகளும் எதிர்பார்க்கும். புதிதாக வரப்போகும் தேமுதிகவும் எதிர்பார்க்கும். ராஜ்யசபா இடங்களை கொடுத்து கட்சிகளை சரிகட்டலாம் என்றால் 5-வது வேட்பாளர் இரண்டாவது பிரிஃபரன்ஸ் வாக்குகளில் தான் வெற்றி பெற வேண்டும். அதற்கு இரு கட்சிகளிளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அது மிகவும் கடினமான பணியாகும். எனவே 5வது வேட்பாளரை நிறுத்தும் முடிவை மு.க.ஸ்டாலின் எடுக்க மாட்டார்.

இந்த நிலையில், காங்கிரசின் நிபந்தனைகளில் ராஜ்யசபா இடங்கள் கேட்பது மட்டுமின்றி, உள்ளாட்சி பதவிகளில் 20 சதவீதம் ஒதுக்கீடு கேட்கிறார்கள். அதற்கு வாய்ப்புகள் இல்லை. விஜய் வந்துவிட்டார் என்றால், அவரிடமே செல்லுங்கள். கட்சி என்பது வேட்டி போன்றது. அதை கழற்றிவிட முடியாது. ஆனால் பதவியோ, வெற்றி – தோல்வியோ துண்டு மாதிரி. காங்கிரஸ் கொடுக்கும் அழுத்தத்திற்கு ராகுல்காந்தி அல்ல, ஜவஹர்லால் நேருவே நேரில் வந்து சொன்னாலும் நடக்காது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ