விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தமிழை விட தெலுங்கு மக்களை இந்தப் படம் அதிகம் கவர்ந்தது.

இந்தப் படத்தை தற்போது தொலைக்காட்சியில் போட்டாலும் அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர. இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வருகிறார். படத்திற்கு தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு விஜய் ஆண்டனி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார்.
தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரன் 2 படம் ரிலீஸ் ஆகுவதில் பல சிக்கல்கள் நிலவி வந்தது. தற்போது அந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதாக தெரிகிறது