spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்! சிக்சர் அடிக்கும் ஸ்டாலின்! அடுத்து என்ன நடக்கும்? உமாபதி நேர்காணல்!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்! சிக்சர் அடிக்கும் ஸ்டாலின்! அடுத்து என்ன நடக்கும்? உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது, தென் மாவட்டங்களில் திமுகவுக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்க்கும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்ட காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத் உடன் சென்று முதலமைச்சரை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும், ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று கூறியுளள்ளார். ஓபிஎஸ் நீண்ட காலமாகவே அதிமுகவில் இருந்தவர். முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தவர். ஜெயலலிதா சிறைக்கு போன பிறகு நம்பிக்கையான ஒரு நபராக ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கினார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவரிடம் பதவியை ஒப்படைத்தார். ஓ.பன்னீர்செல்வத்திட்டம் உள்ள பெரிய குறை, ஒரு கட்சியை கட்டமைத்து, அதை வழிநடத்துகிற திறமை கிடையாது. அவருடைய இலக்கு என்பது அதிமுக தலைமையை கைப்பற்ற வேண்டும் என்றும் என்பது தான். பாஜக தனக்கு அந்த பதவியை, எடப்பாடியிடம் இருந்து பறித்து வழங்கும் என்று நீண்ட காலமாக காத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பாஜக அவரை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை. பிரதமர் தமிழகம் வந்தபோது அவரை பார்க்க அனுமதி தரவில்லை. அதனால் கடைசியில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு வந்துவிட்டார்.

திமுகவும், அதிமுகவும் கடந்த 35-40 ஆண்டுகளாக அரசியலில் பரம எதிரிகளாக உள்ளனர். அந்த இரண்டு கட்சிகளும் ஒருபோதும் இணைய மாட்டார்கள். இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வம் திமுக உடன் கைகோர்த்துள்ளார். அவருடை வருகையால் திமுகவுக்கு என்ன பலன் என்கிற கேள்வி எழுகிறது? தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் மக்களில் ஒரு பகுதியினர் எம்ஜிஆரையும், மற்றொரு பகுதியினர் கலைஞரையும் ஆதரித்து வந்தனர். சசிகலா குடும்பத்தினர் அதிமுகவுக்குள் வந்ததற்கு பிறகு, அவர்கள் பெரும்பான்மையானோர் அதிமுக பக்கம் வந்துவிட்டனர். ஓபிஎஸ்க்கு என்று தனிப்பட்ட முறையில் சமுதாய ரீதியாக வாக்களிக்கக்கூடிய மக்களின் ஆதரவு பெருமளவு உள்ளனர். அதனை கடந்த தேர்தலில் ராமநாதபுரத்தில் அதிகளவு வாக்குகளை பெற்று நிரூபித்துள்ளார். தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளதால் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே அதிமுக கவுண்டர் கட்சி என்றும், தென் மாவட்ட மக்களை அதிமுகவில் புறக்கணிப்பதாகவும் விமர்சனம் இருந்தது. இந்நிலையில், தென் மாவட்ட மக்களின் பிரதிநிதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக அமையும்.

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததால் அவர் சார்ந்த தேனி மாவட்டம் மட்டும் இன்றி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, நெல்லை போன்ற மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் மக்களிடையே எடப்பாடி பழனிசாமி மீது கோபத்தை ஏற்படுத்தும். ஓ.பன்னீர்செல்வதற்கு அவர்கள் அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கினார். தினகரனையும் மிரட்டி கூட்டணிக்குள் சேர்த்துள்ளார் என்று நினைக்கிறார்கள். அதனால் தினகரன் கட்சியினரும் அவர் மீதான அதிருப்தியில் திமுகவுக்கு வந்துவிட்டனர். எனவே இது திமுகவுக்கு  மிகப்பெரிய பலமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் காய் நகர்த்தல்களால் தொடர் வெற்றியை பெற்றுக் கொண்டிருக்கிறார். திமுக ஒரு கட்சியாக வலிமையாக உள்ளது. திமுக கூட்டணியும் வலிமையாக உள்ளது. தற்போது ஓபிஎஸ் இணைந்துள்ளதால் தென் மாவட்டங்களில் எங்கெல்லாம் முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதில் சிக்கல் இருந்ததோ, அவை எல்லாம் ஓபிஎஸ் வருகையால் 50 சதவீதம் தீர்ந்துவிடும். அதிமுகவுக்குள் நடக்கும் மோதல்களை பார்க்கிறபோது திமுக தான் வெற்றி பெறும் என்று முக்குலத்தோர் மக்களிடம் தோன்றும், மேலும் எடப்பாடி பழனிசாமி தங்கள் சமுதாயத்திற்கு எதுவும் செய்ய மாட்டார் என்பதால் அவர்கள் திமுகவுக்குதான் வாக்களிப்பார்கள்.

மேலும், எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள முக்குலத்தோர் சமுதாய தலைவர்கள் பிரபலம் இல்லாதவர்களாக உள்ளனர். மதுரையில் செல்லூர் ராஜு பேட்டியில் தவறாக சொல்லிவிட்டார் என்பதற்காக அவரை தனது வாகனத்தில் ஏற்றாமல் எடப்பாடி பழனிசாமி அவமதிப்பு செய்தார். இது முக்குலத்தார் மக்களுக்கு பெரிய அடியாக பார்க்கப்பட்டது. அதேவேளையில் ஆர்.பி. உதயகுமார், ஒரு நம்பத்தகுந்த, ஒரு மதிக்கத்தக்க தலைவராக பார்க்கப்படுவது இல்லை. ஓபிஎஸ்-ஐ ஒரு கௌரவமான தலைவராகவும், ஜெயலலிதாவால் நம்பிக்கைக்கு உரியவராக பார்க்கப்பட்டதாகவும் நினைக்கிறார்கள். எனவே அந்த மக்களின் வாக்குகளை திமுகவுக்கு வாங்கி வருவார் என்று பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக ஓபிஎஸ் அமைச்சர் ஆக்கப்படுவார். அவர் கேட்கிற இடத்தில் எம்எல்ஏ சீட் வழங்கப்படும். ஒபிஎஸ் மகனுக்கு, 2029 எம்.பி. தேர்தலில் சீட் தருவதாக பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி ஒவ்வொரு வாரமும் பலம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அதேநேரம் அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக பின்னடைவை சந்தித்து வருகிறது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்றால் அந்த மாநிலத்தை பாஜக கைப்பற்றி விடும் என்று சொன்னார்கள். வடமாநிலங்களில் வேண்டும் என்றால் அமித்ஷா அரசியல் ஞானியாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் அவர் அரசியலில் பூஜ்ஜியம்தான். மத்திய அரசு, திமுகவுக்கு இவ்வளவு நெருக்கடிகள் கொடுத்த பிறகும் எல்லோரும் திமுகவை நோக்கி வருவது அவர்களுக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும் விஷயமாகும். ஓபிஎஸ் வருகை என்பது நிச்சயமாக திமுகவுக்கு பல இடங்களில் 5 முதல் 7 சதவீதம் வாக்குகளும், 50 இடங்களில் குறைந்தபட்சம் 2 சதவீதம் வாக்குகள் விழும். தேமுதிக ஒரு கட்சியாக இணைந்துள்ளதும், ஓபிஎஸ் தனி நபராக இணைந்துள்ளதும் ஒன்றுதான். பல தொகுதிகளில் 10 சதவீதம் வாக்குகள் திமுகவுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதிமுக வாக்குகளும், நடுநிலை வாக்குகளும், சாதிய ரீதிய வாக்குகளும் திமுகவுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த தேர்தலோடு பாஜகவின் கதை முடிந்துவிடும். எனவே ஓபிஎஸ் வருகை திமுகவுக்கு கூடுதல் பலம் என்றே பார்க்கலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ